வித்லவ்- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

வெகு நாட்களுக்குப் பின் நமது பால்ய பருவத்திற்கு அழைத்துச் செல்லும் காதல்படம்

ஹீரோ அபிஷன் ஜீவிந்த் பள்ளி காலத்தில் காதல் தோல்வியடைகிறார். அதன்பின் அவருக்கு காதல் கை கூடவேயில்லை. அவருக்கு வரன்களும் எதோ ஒருவகையில் செட்-ஆகாமலே இருக்கிறது. இச்சூழலில் தனது அக்கா ஏற்பாட்டில் திருமண அலையன்ஸுக்காக ஹீரோயினை மீட் பண்ணுகிறார் அபிஷன். அந்த மீட்டிங்கில் சில இன்ட்ரெஸ்டிங்கான அதிர்ச்சிகளும், அடுத்தடுத்த ட்விஸ்களும் அரங்கேறுகிறது. மீட்டிங் முடிவில் ஹீரோவும் ஹீரோனியும் அவர்களின் முன்னால் காதலர்களை தேடி பயணிக்கின்றனர். அந்தப் பயணத்தின் முடிவு என்ன என்பதே க்ளைமாக்ஸ்

ஹீரோவாக முதல் படம் என்பதால் கவனமாக களமாடியுள்ளார் ஹீரோ அபிஷன் ஜீவந்த். பிற நடிகர்களின் சாயல் இல்லாமல் நடிக்க முயன்றுள்ளது பாராட்டத்தக்கது. ஹீரோயின் அனஸ்ரா ராஜன் அனைவரையும் டாமினேட் செய்து அசத்தியுள்ளார். அவரின் அற்புதமான நடிப்பு அவர் வரும் எல்லா காட்சிகளையும் அழகாக்குகிறது. இன்னொரு நாயகியும் தரமான நடிப்பை வழங்கியுள்ளார். அனஸ்ரா ராஜன், அபிஷன், இஸ்லாமிய பெண்ணாக வரும் இன்னொரு நாயகி மூவரும் பங்குபெறும் ஐஸ்கிரீம் ஸ்டாப் காட்சி ஒன்றில் மூவருமே பின்னி பெடலெடுத்துள்ளனர்

ஷான் ரோல்டன் கதையின் போக்குக்கேற்ப நல்லிசையைக் கொடுத்துள்ளார். பாடல்களும் படத்திற்கு வலு சேர்த்துள்ளது. ஸ்ரீரேயாஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு டீசண்டாக அமைந்துள்ளது. ஷார்ப்பான எடிட்டிங் இருந்தாலும் முன்பாதியை இன்னுமே குறைத்திருக்கலாம்

நிறைய காதல் படங்களை ஞாபகப்படுத்தும் கதைக்களம் என்றாலும் இக்கால இளைஞர்களை ஈர்க்கும் படி, அதே சமயம் வல்கர் இன்றி காட்சிகளை அமைத்து ஸ்கோர் செய்துள்ளார் இயக்குநர். படத்தின் முடிவிலும் நல்ல தெளிவோடு உழைத்துள்ளார் இயக்குநர் மதன்

சிம்பிளான கதையை நம்பி தயாரித்த செளந்தர்யா ரஜினிகாந்த் உள்ளிட்ட படக்குழு அனைவருக்கும் வாழ்த்துகள்
4/5