இந்தியன்2- விமர்சனம்
தாத்தா வந்தார்ர்ர்ர் வென்றாரா?
ஊழலை ஒழிக்கப் போகிறேன் என்று வேறு நிலப்பரப்பில் இருந்து பறந்து வருகிறார் இந்தியன் தாத்தா. அவர் வந்தபின் என்ன அலப்பறை நடக்கிறது என்பது கதை. தாத்தா வருவதற்கு முன் அவரை வரவைக்க நடக்கும் ஒரு கதையும் இருக்கிறது. சித்தார்த் ஜெகன் உள்ளிட்ட நண்பர்கள் யூட்யூப் சேனல் நடத்தி ஊழலை ஒழிக்கப்பார்க்கிறார்கள். அது நடக்கவில்லை. ஆதலால் அவர்கள் இணையம் மூலமாக இந்தியன் தாத்தாவை அழைக்கிறார்கள்
கமல் எனும் பிறவிக்கலைஞனுக்கு போதிய தீனியை இப்படம் வழங்கவில்லை. பல இடங்களில் நடிகர் கமல் மறைந்து பிக்பாஸ் கமலே நமக்குத் தெரிகிறார். சித்தார்த் எவ்வளவு சோதனையான நடிப்பை தர முடியுமோ அவ்வளவு நடிப்பைத் தந்துள்ளார். ஜெகன், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி, எஸ்.ஜே சூர்யா, பிரியா பவானிசங்கர், மறைந்த விவேக்& மனோபாலா ஆகியோரெல்லாம் படத்தில் இருக்கிறார்கள். குறையேதுமில்லை
படத்தின் பெருந்தூண் ரவிவர்மன் தான். அவரது கேமரா சுமாரான காட்சிகளை கூட சூப்பராக்க முயற்சித்துள்ளது. CG பரவாயில்லை ரகம். அனிருத் பின்னணி இசையில் வெகு நாட்களுக்குப் பிறகு சொதப்பியுள்ளார். பாடல்களும் பெரிதாக தேறவில்லை. பர்ஸ்ட் பார்ட் ஆன 1996-ல் வெளியான இந்தியனில் பாடல்கள் எல்லாம் தனிச்சுவையாக இருக்கும். பச்
ஊழல் ஒழிப்பு என்ற ஒற்றைப் புள்ளிதான் படம். இதே பாணியில் ஷங்கர் படங்களை நாம் பார்த்து விட்டதால் இப்படமும் அதே டெம்ப்ளேட்டில் இருப்பது நம்மை அலுப்படையச் செய்கிறது. கொஞ்ச கொஞ்சமாக பயணித்து பறக்க வேண்டிய திரைக்கதை முதல் பாதியிலே படுத்துவிடுகிறது. இனி எவ்வளவு பெரிய பட்ஜெட், நடிகர், இயக்குநர் என கூட்டணி சேர்ந்தாலும் திரை எழுத்தும் காட்சிகளும் உயிர்ப்போடு இல்லை என்றால் காலி என்பதற்கு இந்தியன்2-ம் உதாரணம்
2.5/5