எவ்வளவு தான் தாங்குறது..? – உஷாரான விஜய் ஆண்டனி
ஹீரோவாக நடிக்க ஆரம்பித்ததிலிருந்து பெரும்பாலான படங்களை சொந்தமாக தயாரித்து நடித்து வந்தார் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி.
அதில் கடைசியாக வந்த ‘சைத்தான்’, ‘எமன்’, ‘அண்ணாதுரை’, ‘காளி’ ஆகிய நான்கு படங்களும் வணிக ரீதியாக பெரும் நஷ்டத்தைக் கொடுத்தது.
இதற்கு மேல் சொந்தப்படம் என்பது ‘வெந்த புண்ணில் சூட்டுக் கோலை விட்டுக் கொள்வதற்கு சமம்’ என்று உஷாரானவர் சொந்தத் தயாரிப்பை ஓரங்கட்டி வைத்து விட்டு வெளிக்கம்பெனி படங்களில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.
மூடர் கூடம் நவீன் இயக்கும் புதுப்படமாக அக்னி சிறகுகள் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் விஜய் ஆண்டனி. அவருக்கு ஜோடியாக இப்படத்தில் ஷாலினி பாண்டே நடிக்கிறார். இவர்களுடன் இப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் அருண் விஜய் நடிக்கிறார்.
ஹீரோவை மனதில் வைத்து கதை எழுதும் இயக்குனர்களுக்கு மத்தியில், கதையை எழுதிவிட்டு இதற்கு விஜய் ஆண்டனி தான் பொருத்தமாக இருக்கும் என்று நம்பி அவரை கமிட் செய்தாராம் இயக்குனர் நவீன்
தமிழ், தெலுங்கு என இரு மொழிப்படமாக தயாராகும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஐரோப்பிய நாடுகள் சிலவற்றிலும், கொல்கத்தா மற்றும் கோவா ஆகிய இடங்களிலும் நடக்க உள்ளது. விரைவில் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.
‘புத்திசாலித்தனமான முடிவு ஜீ’