நிகிஷா – சிம்ரன் – இனியா – இருக்காங்க…. ஆனா படம் ஃபுல்லா பயமுறுத்துவாங்க!

Get real time updates directly on you device, subscribe now.

Nikisha1

யு.கேவில் பிறந்த புள்ளையாச்சே… அழகு அவ்வளவு தூரத்துக்கு கொட்டிக்கிடக்கிறது.

பார்க்கப் பார்க்க பார்த்துக் கொண்டே இருக்கும் போல மப்பும், மந்தாரமுமாக இருக்கிறார் நிகிஷா பட்டேல்.

கவர்ச்சியும் காட்டுகிறார், நன்றாகவும் நடிக்கிறார். தெலுங்கில் அவரை ரசிகர்கள் வாரி அணைத்துக் கொண்டாலும் தமிழில் சரியான படங்கள் அமையவில்லை. அந்தக்குறை கரையோரம் படத்தில் நிறைவேறி விடும் என்றே தோன்றுகிறது.

இன்று மாலை இப்படத்தின் ஆடியோ பங்ஷனில் பேசிய படத்தின் இயக்குநர் ஜெ.கே.எஸ்

கரையோரம் திரைப்படம் பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை உங்களை பயமுறுத்தும் வித்தியாசமான த்ரில்லர் திரைப்படமாக இருக்கும். இந்த படத்தை நாங்கள் மிகப்பெரிய தொழில்நுட்ப குழுவை கொண்டு உருவாக்கியுள்ளோம்.

இந்தப் படத்தில் நடிகை சிம்ரன் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு நிச்சயம் மிகப்பெரிய திருப்புமுனை திரைப்படமாக அமையும் என்பதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை. அவருக்கு இது “கம் பேக்’’ படமாக இருக்கும் என்று கூட சொல்லலாம்.

இந்த படத்தை நாங்கள் மும்மொழிகளில் உருவாக்கியுள்ளோம். அதேபோல் இந்த படம் நாயகி நிகேஷா படேலுக்கு அவருடைய திரையுலக வாழ்க்கையில் முக்கியமான திரைப்படமாக அமையும். கவர்ச்சி கன்னியாக வளம் வரும் நிகேஷாவிடமிருந்து மிகச்சிறந்த நடிப்பை இந்த படத்துக்காக வெளிக்கொண்டு வந்துள்ளேன். இனியா அவர்களின் நடிப்பு இந்த படத்தில் நிச்சயம் பேசப்படும் அவர் இந்த படத்தில் முற்றிலும் புதுமையான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

படத்தின் இடைவேளை பகுதி நிச்சயம் எல்லோரிடமும் மிகுந்த வரவேற்பை பெறும். அதற்க்கு காரணம் இதுவரை யாரும் தொடாத ஒரு விஷயத்தை நாங்கள் படத்தில் கையாண்டுள்ளோம் என்றார்.