‘டீ போடு’ கான்செப்ட் திருடப்பட்டதா? : ‘அஞ்சல’ படக்குழு மீது பரபரப்பு புகார்

Get real time updates directly on you device, subscribe now.

anjala2

ரு டீ கடைக்கும், ஹீரோவுக்குமான உள்ள ஒரு உறவைத்தான் ‘அஞ்சல’ படத்தின் முக்கிய கதையம்சமாக்கியிருப்பதாகச் சொன்னார் அப்படத்தின் இயக்குநர் தங்கம் சரவணன்.

அதேபோல படத்தில் டீக் கடையை பெருமைப்படுத்தும் விதமாக ‘டீ போடு’ என்ற பாடலும் படத்தில் இடம்பெற்றிருக்கிறது.

பாடல் பிரச்சனையில்லை. அந்தப்பாடலின் கான்செப்ட் தான் எங்களிடமிருந்து திருடப்பட்டது என்கிறது ‘மாமிபாய்ஸ்’ என்கிற சிங்கப்பூர் இசைக்குழு.

என்ன பிரச்சனை? என்பதை பார்க்கும் முன்பு யார் இந்த மாமிபாய்ஸ் (Mamiboys) என்று பார்க்கலாம்.

சிங்கப்பூரை சேர்ந்த இசையமைப்பாளர் , ராப் பாடகர் மற்றும் பாடல் ஆசிரியரான கிரிஷ்செனோ (Krisheno) எனும் இளைஞர் அவரது சென்னை நண்பர்கள் மற்றும் பாடகர்களாகிய கேலப் ஜேக்கப் (Caleb Jacob) மற்றும் கெவி ஜே (Kevi-J) இணைந்து உருவாக்கியதுதான் மாமிபாய்ஸ் (Mamiboys) எனும் இசைக்குழு.

ஹாரிஸ் ஜெயராஸ், ஶ்ரீகாந்த் தேவா போன்ற தமிழ் தெலுங்கு இசையமைப்பாளர்களுடன் இணைந்து திரைப்பட பாடல்களில் பங்கெடுத்தவர்கள்.

முதன்முதலில் உலகக் கோப்பைக் கிரிக்கெட்டுக்காக சலோ இந்தியா எனும் இவர்களின் தனிப்பாடல், நார்வே சர்வதேச படவிழாவில் விருதுப்பெற்ற படமாகிய ரோடு சைடு அம்பானியில் இடம்பெற்றது. இது மட்டுமின்றி பல இண்டர்நேஷனல் போட்டிகளிலும் இவர்கள் விருது பெற்றுள்ளனர்.

சமீபத்தில் ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு இவர்கள் வெளியிட்ட பாடலான Empower நல்ல வரவேற்பை பெற்றது.

Related Posts
1 of 11

2013 ல் ‘தம் டீ’ எனும் ஆல்பத்தை சென்னை ஏ.வி.எம் ஸ்டூடியோவில் வெளியிட்டனர். அதில் இடம்பெற்ற பாடல்கள் நல்ல வரவேற்புடன் ஐ டியூன்ஸ், கூகுள் ப்ளே ஆகியவற்றில் ஹிட்டை அள்ளின.

‘தம் டீ’க்கான வரவேற்பையும் வெற்றியையும் தொடர்ந்து இதை படமாக்கிடும் முயற்சியில் இறங்கினர். இடையில் நிதிப் பிரச்சனையால் வேலைகள் தடைப்பட்டன. இப்போது மீண்டும் பணிகள் உயிர் பெற்றுள்ளன.

இந்நிலையில் தனது ‘தம் டீ’ பாட்டின் கான்செப்டைத் திருடி தங்கம் சரவணன் இயக்கியுள்ள ‘அஞ்சல’ படத்தில் ‘டீ போடு’ பாடலாக உருவி சொருகி உள்ளனர் என்று குற்றம் சாட்டுகின்றனர் மாமிபாய்ஸ் (Mamiboys) குழுவினர்.

இது பற்றிக் கூறும்போது “டீ போடு பாடலையும் விடியோவையும் பார்த்து அதிர்ந்தோம் அப்படியே ‘தம் டீ’ கான்செப்ட் எங்கள் ‘தம் டீ’ விடியோவில் இடம்பெறும் சீன்ஸ் அனைத்தும் ‘அஞ்சல’ ‘டீ போடு’ வீடியோவில் உள்ளது.

‘டீ போடு’ பாடலை பார்த்த எங்களின் ரசிகர்கள் ஃபேஸ்புக்கில் தங்கள் கோபத்தை #DUMTEAvsTEAPODU எனும் hashtag மூலமாக காட்டி உள்ளனர்.

எங்கள் சார்பாகவும் அனைத்து தனிப்பட்ட நட்சத்திரங்கள் சார்பாகவும் நாங்கள் நீதி மன்றத்தை அணுகி ‘அஞ்சல’ திரைப்படத்தை தடைபெற அஞ்ச மாட்டோம் என்கின்றனர் மாமிபாய்ஸ் (Mamiboys) குழுவினர்.

‘மாமிபாய்ஸி’ன் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு என்ன சொல்லப் போகிறது ‘அஞ்சல’ டீம்?

பொருத்திருந்து பார்ப்போம்!