சிரிங்க சிரிங்க சிரிச்சுக்கிட்டே இருங்க… : சத்தியமா இது ‘மதுரை பேக்ட்ராப்’ படம்ங்க…

Get real time updates directly on you device, subscribe now.

1441

துரை பேக்ட்ராப்னாலே ஸ்க்ரீன்ல ஒரே வாடை தான் வரும், அதுதான் ரத்த வாடை!

வெட்டு, குத்து, ரத்தம்னு மதுரைன்னாலே அந்த மாதிரியான சமாச்சாரங்கள் மட்டும் தான் என்பது தான் காலங்காலமாக ரசிகர்களின் நினைப்பு.

”அப்டியெல்லாம் இல்லீங்க… அங்கேயும் வயிறு வலிக்க சிரிக்க வைக்கிற காமெடிச் சமாச்சாரங்கள் அவ்ளோ இருக்கு” என்கிறார் அதே மண்ணிலிருந்து வந்திருக்கும் இயக்குநர் ஜி.மணிகண்டன்.

திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் சி.வி.குமார் தயாரித்திருக்கும் ‘144’ படத்தின் இயக்குநர் இவர் தான்.

மதுரையை கதைக்களமாகக் கொண்டு ரிலீசாகிற எல்லாப் படங்களும் ஒரே ப்ளேவர்ல இருக்கு. அதை மாத்தணும், அங்கேயும் லந்தைக் கொடுக்கிற ஆசாமிகள் எக்கச்சக்கம் உண்டு. அவங்களை பின்னணியா வெச்சு ஃபுல் அண்ட் ஃபுல்லா ஒரு காமெடிப் படம் தரணும்னு யோசிச்சேன். அப்படி தயாரானது தான் இந்த ‘144’.

ரெண்டு ஊர்க்காரங்களுக்குள்ள சண்டை வரும், அது கண்டினியூவ் ஆகாம இருக்கிறதுக்கு இந்த ‘144’ தடை உத்தரவை கவர்மெண்ட் போடும். அது சீரியஸ். ஆனா இந்த ‘144’  செம ஜாலி.

Related Posts
1 of 10

ரெண்டு ஊருக்கும் பொதுவுல இருக்கிற ஏரியில யார் மீன் பிடிக்கிறதுங்கிறதுல ஈகோ வருது. அதனால அங்க ‘144’ தடை உத்தரவு போடுறாங்க. அதனால ஏற்படுகிற பிரச்சனைகளைத்தான் செமக் காமெடியாச் சொல்லியிருக்கிறார்களாம்.

”நானும் மதுரைக்காரன் தான். திருமங்கலம் தான் என்னோட சொந்த ஊர் 30 வருஷமா அங்க தான் இருந்தேன். படங்கள்ல காட்டுற மாதிரியான வெட்டு, குத்து சமாச்சாரங்களை எல்லாம் நான் பார்த்ததே இல்லை. மதுரைன்னாலே பாசம் காட்டுவாங்க, நல்லா உபசரிப்பாங்க, பேசும்போதே காமெடி தூக்கலா இருக்கும்.  அப்படிப்பட்ட படமாகத்தான் இதை தயாரிச்சிருக்கேன்” என்று சொல்லும் தயாரிப்பாளர் சி.வி.குமாரின் நெருங்கிய நண்பராம் இயக்குநர் ஜி.மணிகண்டன்.

”நான் யார்கிட்டேயும் உதவி இயக்குநரா வேலை செய்யல.., இந்தக் கதையைச் சொன்ன உடனே தயாரிச்சார். என் திறமை மேல அவர் வைச்ச நம்பிக்கையை காப்பாத்துவேன்னு நம்புறேன்” என்றார் இயக்குநர் ஜி.மணிகண்டன்.

மிர்ச்சி சிவா, அசோக் செல்வன், ஓவியா, ஸ்ருதி ராமகிருஷ்ணன் ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்தில் பூட்டை உடைத்து திருடும் திருடனாக வருகிறாராம் மிர்ச்சி சிவா.

”திருடன்னு உடனே யாரும் பயந்துற வேணாம். என்னால ஒரு பூட்டைக் கூட ஒழுங்கா தொறக்க முடியாது. போலீசே என்னைப் பார்த்து பரிதாபப்படும் அப்படி ஒரு அப்பாவியான கேரக்டர்” என்கிறார் சிவா.

இன்னொரு ஹீரோவான அசோக் செல்வனுக்கு சொந்த ஊர் ஈரோடு, வளர்ந்ததெல்லாம் சென்னையில தான். அதனாலேயே எனக்கு மதுரை பாஷையைப் பேசி படத்துல நடிக்கிறது ரொம்ப சவாலா இருந்துச்சு. தெரிஞ்ச நண்பர்களோட பேசி பிராக்டிஸ் எடுத்து டிபிக்கல் மதுரை பாஷையைப் பேசி நடிச்சது புது எக்ஸ்பீரியன்ஸா இருந்துச்சு என்று சிலிக்கிறார்.

இனிமே மதுரைன்னாலே வெட்டு குத்து ரத்தம்னு மட்டும் முடிவுக்கு வந்துறாதீங்க ரசிக கண்மணிகளே…