நோ கட், குடும்பத்தோட பார்க்கலாம்.. – ‘விஸ்வாசம்’ படத்துக்கு கிளீன் ‘யு’ சர்ட்டிபிகேட்!

Get real time updates directly on you device, subscribe now.

ஜீத் – நயன்தாரா நடிப்பில் பொங்கல் விருந்தாக ரிலீசாகப் போகும் படம் ‘விஸ்வாசம்’. சிவா இயக்கியிருக்கும் இப்படத்துக்கு சென்சார் அதிகாரிகள் ஒரு கட் கூட கொடுக்காமல் கிளீன் “U” சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள்.

இதுகுறித்து சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பாளர் டி ஜி தியாகராஜன் கூறியதாவது, “எங்கள் தயாரிப்பில் வெளிவர இருக்கும் “விஸ்வாசம்” படத்துக்கு தணிக்கை அதிகாரிகள் “U” சான்றிதழ் தந்ததில் எங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. இந்தப் படத்தில் அஜித், இயக்குனர் சிவா இருவரும் தூண்களாக இருந்து உழைத்து இருக்கிறார்கள்.

Related Posts
1 of 86

எல்லா தரப்பினரையும் கவரும் படமாக விஸ்வாசம் அமையும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. இசை அமைப்பாளர் டி இமானின் இசை பொங்கல் கொண்டாடத்துக்கு ஏற்றவாறு பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது. மாநகரம் முதல் குக்கிராமம் வரை பட்டி தொட்டி எங்கும் இந்த படத்தின் பாடல்கள் செம ஹிட்டாகியிருக்கிறது, பாடல்களைப் போலவே படமும் ஹிட் ஆகும்” என்றார்.