கார்த்திக் சுப்புராஜின் உதவியாளர் இயக்கும் ‘த்ரில்லர்’ படம்

Get real time updates directly on you device, subscribe now.

54321

மெயின் ஸ்ட்ரீம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் உருவாகியுள்ள த்ரில்லர் படம் ‘54231’. இப்படத்தை கார்த்திக் சுப்புராஜின் உதவியாளர் ராகவேந்திர பிரசாத் இயக்கி யுள்ளார்.

‘ரம்மி’, ‘தாண்டவக்கோனே’ படங்களில் நடித்த ஜி.ஆர். அர்வின் நாயகனாக நடித்திருக்கிறார். நாயகி கன்னடவரவு பவித்ரா. ‘நெருங்கிவா முத்தமிடாதே’ நாயகன் சபீர் வில்லனாக இருக்கிறார். மேலும் ரோகிணி, ரவிராகவேந்தர், ‘பசங்க’ சிவகுமார், நடித்துள்ளனர்.

படக்கதையில் இரண்டு மணி நேரம் நடக்கும் கதையைத் திரையில் இரண்டுமணி நேரம் நடக்கும் காட்சிகளாக உருவாக்கி உள்ளது படத்தின் சிறப்பு.

“படத்தில் 5 பேர் பாத்திரங்கள், 4 லைப் ஸ்டைலான விதத்தில் 3 கொலைகளை 2 மணி நேரத்தில் செய்து பழிதீர்த்தல் என்கிற 1 ஐ எப்படி நிறைவேற்றி முடிக்கிறார்கள் என்பதே கதை. ” என்கிறார் இயக்குநர் ராகவேந்திர பிரசாத்.

‘காதல்’ புகழ் ஜோஷ்வா ஸ்ரீதர் இசையமைத்துள்ளார். பானுமுருகன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.இவர் பாலசுப்ரமணியெம்மின் உதவியாளர்

படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. அடுத்த மாதம் வெளிவரவுள்ள’ 54321′ படத்துக்கு இப்போதே 5..4..3..2..1 என்று கவுண்ட் டவுன் ஸ்டார்ட் செய்யலாம் போலிருக்கிறது.