அஞ்சு பைசா கொடுக்கல… : ஆனாலும் ‘அள்ளி விடுறாங்க’ அஜித் – விஜய் ரசிகர்கள்

Get real time updates directly on you device, subscribe now.

vijay1

ப்போது மழை பெய்யும் என்கிற ஏக்கம் போய், விடிந்தவுடன் எட்டிப் பார்க்கும் கொஞ்சூண்டு வெயில் அப்படியே நீடிக்காதா? என்று ஏங்க ஆரம்பித்து விட்டார்கள் சென்னை மக்கள்.

அந்தளவுக்கு ஒட்டு மொத்த சென்னையையும் வேரோடு புரட்டிப் போட்ட மழை வெள்ளத்தில் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அப்படி பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழகம் மட்டுமில்லாமல், அண்டை மாநிலங்களில் இருந்தும் நேசக்கரங்கள் நீண்ட வண்ணம் உள்ளன.

இப்படி எத்தனையோ இடங்களில் இருந்து உதவிகள் வந்தாலும் திரையுலகம் என்ன செய்தது? அதிலும் உச்ச நட்சத்திரங்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய் ஆகியோர் என்ன செய்தார்கள் என்று எதிர்பார்ப்பது வாடிக்கை தான்.

கோடிகளை சம்பளமாக வாங்கும் அவர்களிடம் நெருக்கடியான நேரங்களில் அப்படிப்பட்ட உதவியை எதிர்பார்ப்பதும் எந்த தவறும் இல்லை.

அப்படி எதிர்பார்த்த வகையில் இந்த நான்கு ஹீரோக்களில் ரஜினி மட்டுமே தனது ராகவேந்திரா ட்ரஸ்ட் மூலம் 10 லட்சம் ரூபாயை நன்கொடையாக தமிழக அரசின் வெள்ள நிவாரண நிதிக்கு நடிகர் சங்கம் மூலம் அனுப்பியிருக்கிறார்.

Related Posts
1 of 147

கமல்ஹாசனோ ஒரு மொழிப்பெயர்ப்பு செய்தி தந்த இம்சையால் தன் அலுவலகத்தில் தேங்கியிருக்கும் சாக்கடை நீரைக்கூட வெளியேற்ற முடியாமல் தவித்து வருகிறார்.

இந்த இருவரின் நிலை தெரிந்து விட்டாலும் அடுத்துள்ள அஜித் விஜய் கொடுத்ததாக சொல்லப்படும் நிவாரணி நிதி பற்றி சமூகவலைத்தளங்களில் அவர்களது ரசிகர்கள் அடித்து விடும் புளுகுமூட்டைகள் தான் உச்சபட்ச காமெடியாக இருக்கிறது.

விஜய் 5 கோடி கொடுத்தார், அஜீத் 60 லட்சம் கொடுத்தார் என்று பொய்ச்செய்திகளை அள்ளி விட்டுக் கொண்டிருக்கிறார்கள் விஜய், அஜித் ரசிகர்கள்.

இப்படி வரும் செய்திகளில் துளியளவு கூட உண்மையில்லை என்பதே நூறு சதவீதம் உண்மை.

50 அரிசி மூட்டைகளைக் கொடுத்தாலே அதற்கு பிரஸ்மீட் வைத்து அறிவிக்கும் விஜய் 5 கோடி நிவாரணம் கொடுத்தால் மீடியாக்களுக்கு தெரியாமல் தருவார் என்பது தான் அவரை ஆண்டாண்டு காலமாக அறிந்தவர்கள் எழுப்பும் கேள்வி?

அதேபோல அஜித்தும் அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஓய்வெடுத்து வருகிறார். அவர் தரப்பிலும் 60 லட்சம் நிதி தரப்பட்டதாக வரும் செய்திகளிலும் உண்மையில்லை.

பின் குறிப்பு : இந்தச் செய்தி தவறு என்று விஜய் அஜித் ரசிகர்கள் கோபத்தோடு கிளம்புவீர்கள். அப்படி நீங்கள் நினைத்தால் இருவரும் நிவாரண நிதி கொடுத்ததற்கான ஆதாரத்தை வெளியிட்டால் ( பத்திரிகைகளில் வந்த செய்திகளை தவிர்த்து ) நல்லது.