மரண தண்டனைக்கு எதிராக உருவாகும் படம்!

Get real time updates directly on you device, subscribe now.

10/10 என்ற இந்த நாள் உலகம் முழுக்க தூக்குத் தண்டனைக்கு எதிரான நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நாளில் தூக்குத் தண்டனையை மனித நேய மீறல் என்று சொல்லும் திரைக்கதையோடு WEC பிலிம் பேக்டரி நிறுவனம் ஆதியோகி சிங்கை எம்.ரவி என்ற பெயரில் படம் ஒன்றை தயாரிக்கிறது.

உலகம் முழுவதும் மரண தண்டனைக்கு எதிராகப் போராடும் சர்வதேச மனித உரிமை வழக்கறிஞர் சிங்கப்பூர் தமிழரான ஆதியோகி சிங்கை எம்.ரவி என்பவர். இவர் எழுதிய கம்பாங் பாய் (KAMPONG BOY) மற்றும் ஹங் அட் டான் (HUNG AT DON) என்கிற புத்தகங்களின் உண்மையைத் தழுவி இந்த படம் உருவாகிறது.