காமெடிப் பட்டாளங்களுடன் சேது கலகலப்பூட்ட வரும் ‘ஆளுக்கு பாதி 50-50’

‘கண்ணா லட்டு திண்ண ஆசையா…’ ‘வாலிப ராஜா’ படங்களில் கதாநாயகனாக நடித்து பிரபலமானவர் சேது.
இப்படங்களைத் தொடர்ந்து “ஆளுக்கு பாதி 50-50” என்ற படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக ‘144’ படத்தில் நடித்த ஸ்ருதி ராமகிருஷ்ணன் நடிக்கிறார்.
இவர்களுடன் பால சரவணன், மயில்சாமி, பட்டிமன்றம் ராஜா, ‘லொள்ளு சபா’ சுவாமிநாதன், மதன்பாபு, ஸ்ரீ ரஞ்சனி, ஜான் விஜய், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ‘முண்டாசுப்பட்டி’ முனிஷ்கான், ‘யோகி’ பாபு என பெரிய காமெடிப் பட்டாளங்களுடன் தொடங்கி உள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல கதாநாயகியை பேசி வருகிறார்கள்.
ஆர்.கே.பிரதாப் ஒளிப்பதிவு செய்ய, தரண் இசை அமைக்கிறார். ராஜா சேதுபதி எடிட்டிங் செய்கிறார். திரைக்கதை எழுதி இயக்குகிறார் அறிமுக இயக்குநர் கிருஷ்ண சாய். நகைச்சுவை நிரம்பிய இத்திரைப்படத்தை Lipi Cine Craft V.N.Ranjith Kumar தயாரிக்கும் 2-வது படம் இது.
படத்தைப் பற்றி இயக்குனர் கிருஷ்ண சாய் கூறியதாவது,
இன்று இருக்கும் பரபரப்பான சூழ்நிலையில் மக்கள் திரையரங்கு செல்வது அவரவர் கவலைகளை மறந்து வாய்விட்டு சிரித்து மகிழவே… அதைத் திரைப்படத்தின் மூலம் நிறைவேற்றியுள்ளேன்.
சென்னை, கும்பகோணம் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது. பாடல்களை வெளிநாட்டில் படம்பிடிக்க திட்டமிட்டுள்ளனர்.