நடிகர் அசோக் செல்வன் பத்திரிகையாளர் சந்திப்பு!

Get real time updates directly on you device, subscribe now.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் திறமை மிகு இளம் நடிகர்களில் ஒருவர் அசோக் செல்வன். ஒவ்வொரு படத்திலும்  மாறுபட்ட கதைகளங்களை தேர்ந்தெடுத்து,  வித்தியாசமான பாத்திரங்கள் மூலம் அசத்தி வரும் அசோக் செல்வன் தனெக்கென ஒரு தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கியுள்ளார். மேலும் விநியோக தளங்களில் அவரது படங்களுக்கு தனித்த மதிப்பு இருக்கிறது.

ஓ மை கடவுளே, மன்மத லீலை என வெற்றிப்படங்களை தொடர்ந்து அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான நித்தம் ஒரு வானம் திரைப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தனது வெற்றிக்கு உடனிருந்த பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இன்று பத்திரிகை ஊடக நண்பர்களை சந்தித்தார்.

Related Posts
1 of 2

இந்நிகழ்வினில் அசோக் செல்வன் பேசியதாவது.

கிராமத்து கதையில் நடிக்க வேண்டுமென எனக்கும் ஆசை இருக்கிறது. இப்போது ஒரு படத்தில் பேசி வருகிறோம் விரைவில் கிராமத்து கதையில் என்னை பார்க்கலாம். எனக்கு இப்போதைக்கு கல்யாண பேச்சு இல்லை. ஆனால் வீட்டில் பார்த்து வைக்கும் திருமணம் என் குணத்திற்கு செட் ஆகாது. அடுத்ததாக சரத்குமார் சாருடன் இணைந்து ஒரு திரில்லர் படத்தில் நடித்துள்ளேன். மேலும் சில படங்களில் ஒப்பந்தமாகியிருக்கிறேன். அது பற்றிய தகவல்கள் தயாரிப்பு தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியாகும். எனக்கு எப்போதும் போல் உங்கள் ஆதரவை தருவீர்கள் என நம்புகிறேன் நன்றி.

#AshokSelvan