நண்பனுக்கு டாக்டர் பெண் தேடும் நடிகர் கஞ்சா கருப்பு!

Get real time updates directly on you device, subscribe now.

கவிஞர் ஜெயம்கொண்டான் கே.கே.நகரில் கவிஞர் கிச்சன் என்ற பெயரில் ஒரு ஹோட்டலை நடத்தி வருகிறார். வேடப்பன், இந்திரசேனா, ஓடும் மேகங்கள், ஒரு சந்திப்பில், சோக்கு சுந்தரம் ஆகிய படங்களுக்கு பாடல் எழுதியிருக்கிறார்.

2000 ஆம் ஆண்டு முதல் கஞ்சா கருப்பின் நண்பரானா ஜெயம்கொண்டானுக்கு கஞ்சாகருப்பு பெண் தேட தொடங்கியிருக்கிறார். விரைவில் கஞ்சா கருப்பு ஊரப்பாக்கத்தில் ஹோட்டல் ஒன்றை திறக்க உள்ளார். அதை ஜெயம்கொண்டானிடன் நிர்வகிக்கும் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார்.

தற்போது இசையமைப்பாளர் பரணி இசையில் ஒரு பாடல் எழுதியிருக்கிறார். திருப்புகழ் படத்தில் ஒரு பாடலும், பெயரிடப்படாத புதுப்படம் ஒன்றில் ஒரு பாடலும் எழுதியிருக்கிறார்.

ஜெயம்கொண்டான் கவிஞர் கிச்சன் ஹோட்டலின் ரெகுலர் கஸ்டமர்கள் விஜய் ஆண்டனி, பார்த்திபன், கஞ்சாகருப்பு, அப்புக்குட்டி, முனிஸ்காந்த், புரோட்டா சூரி, காளி வெங்கட்.

இவர் எழுதிய இலக்கிய காதலில் இலக்கண சுருதி கவிதை நூலை அவரது சொந்த ஊரான உடையார் பாளையாத்திற்கு வந்து வெளியிட்டுக்கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.