மின்னல் வேகத்தில் வெளியாகியுள்ள“கேக்கு வாக்கு”வீடியோ!

பன்முக திறமை கொண்ட நடிகர் ஃபஹத் பாசில், ‘பாகுபலி’ போன்ற மாபெரும் வெற்றிப் படங்களை உருவாக்கிய தயாரிப்பு நிறுவனமான அர்கா மீடியா ஒர்க்ஸ் மற்றும் தொலைநோக்கு படைப்பாளி இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி ஆகியோரின் கூட்டணி இணையும் போது, ‘Don’t Trouble the Trouble’ போன்ற ஒரு மாயாஜாலமான படைப்பு உருவாகிறது.
ஷோயிங் பிசினஸ் பேனரின் கீழ் தனது முதல் விநியோக முயற்சியான ‘பிரேமலு’ மூலம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற தயாரிப்பாளர் எஸ்.எஸ். கார்த்திகேயா, தற்போது இந்தியாவின் பெருமைக்குரிய ‘பாகுபலி’ திரைப்படத் தொடரைத் தயாரித்த புகழ்பெற்ற அர்கா மீடியா ஒர்க்ஸ் இணைந்து இந்த பிரம்மாண்டமான படைப்பை உருவாக்கி வருகிறார்.
“டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்” ( Don’t Trouble the Trouble ) எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் ஷஷாங்க் எலெட்டி இயக்குகிறார். ஃபஹத் பாசில் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். பாராட்டுகளைப் பெற்ற தயாரிப்பாளர்களான ஷோபு யர்லகட்டா மற்றும் பிரசாத் தேவினேனி, எஸ்.எஸ். கார்த்திகேயாவுடன் இணைந்து இந்த சுவாரஸ்யமான படைப்பை தயாரிக்கின்றனர். ரசிகர்களிடையே எதிர்பார்ப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்திய டீசரைத் தொடர்ந்து, தற்போது “கேக்கு வாக்கு” ( Cakeu Walku ) வீடியோ பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.