உழவர் பெருமக்களை கௌரவப்படுத்திய நடிகர் கார்த்தி !

கோலாகலத் திருவிழாவாக மாறிய ‘உழவன் ஃபவுண்டேஷனின் உழவர் விருதுகள் 2025’ – விவசாயத்துறையில் சேவைமனப்பான்மையோடு இயங்கும் 5 பேருக்கு கெளரவம். விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் அரவிந்த் சாமி, நடிகை சரண்யா பொன்வண்ணன், இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் எழுத்தாளர் பவா செல்லத்துரை ஆகியோர் கலந்துக் கொண்டார்கள்.
மேலும் இந்நிகழ்வில் வேளாண் துறைசார் வல்லுநர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்துக் கொண்ட இந்த விழா இனிதே நடைபெற்றது.
இதில்
• சிறந்த பெண் வேளான் தொழில் முனைவோர் விருது திருமதி. சுகந்திக்கும்
• நீர்நிலைகளை மீட்டெடுத்தலுக்கான சிறந்த பங்களிப்பு விருது திருமதி. சியாமளாவுக்கும்
• மாபெரும் வேளான் பங்களிப்புக்கான விருது – கலசப்பாக்கம் பாரம்பரிய விதைகள் மையத்திற்கும்
• கால்நடை துறையில் சிறந்த பங்களிப்பு வழங்கியதற்கான விருது கால்நடை மருத்துவர் திருமிகு. விஜயகுமாருக்கும்
• சிறந்த பெண்கள் வேளான் கூட்டமைப்புக்கான விருது – நம்மாழ்வார் இயற்கை சிறுதானிய உழவர் உற்பத்தியாளர் குழுவுக்கும் வழங்கி கெளரவிக்கப்பட்து.
இந்த ஆண்டு விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் உழவர் விருதோடு இரண்டு இலட்ச ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது. கடந்த ஆண்டுகளில் ஒரு இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.