வில்லன் கேரக்டர் வேணாம்பா… : புலம்பும் லால் சேட்டன்
‘சண்டக்கோழி’ படத்தில் எப்படி விஷால் ஈர்த்தாரோ அந்த லெவலுக்கு கொஞ்சமும் குறைவில்லாமல் ரசிகர்களை ஈர்த்தவர் அதில் வில்லனாக நடித்த பிரபல மலையாள நடிகர் லால்.
அந்தப் படத்தின் வெற்றியால் தொடர்ந்து மருதமலை, தீபாவளி என தமிழ்ப்படங்களில் அவ்வப்போது தலைகாட்டி வரும் லால் சமீபகாலமாக தன்னைத் தேடிவரும் தமிழ்ப்பட வாய்ப்புகளை தவிர்க்க ஆரம்பித்து விட்டார்.
என்னை நெறைய டைரக்டர்கள் தமிழ்ப்படங்கள்ல நடிக்கச் சொல்லி கேட்டு என்னைத் தேடி கேரளாவுக்கு வர்றாங்க. ஆனா அப்படி தேடி வர்ற எல்லாருமே பயங்கரமான வில்லன் கேரக்டர்ல நடிக்கச் சொல்லி கேக்குறாங்க. வில்லன்னா ஹீரோவோட சண்டை போடணுமே..? என்னோட வயசுக்கு முன்ன மாதிரி ஓடியாடி சண்டைப் போட முடியல. அதுக்காகவே நெறைய படங்களை நான் தவிர்த்துக்கிட்டு வர்றேன் என்று சொல்லும் லால் சேட்டன் இனிமே யார் எனக்கு நடிக்கக் கூப்பிட்டாலும் நல்ல கேரக்டர் ரோலா கூப்பிடுங்க கண்டிப்பா வர்றேன் என்று புலம்புகிறார்
56 வயதாகும் லால் மலையாளத்தில் தொடர்ந்து பிஸியாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.