சும்மாவா, ரஜினி படமாச்சே…? : ஆச்சரியம் விலகாத ‘அட்டகத்தி’ தினேஷ்
சூப்பர் ஸ்டாரோடு ஒரு படத்திலாவது நடித்து விட மாட்டோமா? என்று ஏங்கித் திரியும் நடிகர்களுக்கு மத்தியில் ‘அட்டகத்தி’ தினேஷ் உண்மையிலேயே கொடுத்து வைத்தவர் தான்.
‘மெட்ராஸ்’ படம் மாதிரியே ரொம்ப யதார்த்தமாக இருக்கணும் என்கிற ரஜினியின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு இயக்குநர் பா.ரஞ்சித் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து புதிய படத்தை இயக்கத் தயாராகி வருகிறார்.
அதற்காகவே அவரது முந்தைய படங்களில் நடித்த யதார்த்த நடிகர்கள் சிலரையும் படத்தில் பல கேரக்டர்களில் உலவ விட திட்டமிட்டிருக்கிறார்.
அதில் ஒரு கேரக்டரில் தான் ‘அட்டகத்தி’ ஹீரோ தினேஷை நடிக்க வைக்க முடிவு செய்திருக்கிறாராம் ரஞ்சித்.
தினேஷை ஹீரோவாக அறிமுகப்படுத்தியதே ரஞ்சித் தான். அந்த நன்றிக்கடனுக்காக ”எந்த கேரக்டரா இருந்தாலும் பரவாயில்லை நீங்க கூப்பிட்டா உடனே கெளம்பி வந்திடுவேன்” என்று ஓ.கே சொல்லியிருக்கு தினேஷ் இன்னும் அந்த ஆச்சரியத்திலிருந்து விலகவில்லையாம்.
சூப்பர் ஸ்டாரின் படத்தில் வாய்ப்பு என்றால் கசக்குமா என்ன..?