மற்றொரு படத்தில் கதாநாயகனாக நடிக்கும் ராமராஜன்!
எண்பது தொண்ணூறுகளின் காலகட்டத்தில் தொடர்ந்து வெள்ளிவிழா படங்களை கொடுத்து மக்கள் நாயகனாக, வெற்றிகரமாக நடிகராக வலம் வந்தவர் நடிகர் ராமராஜன். கிட்டத்தட்ட 14 வருட இடைவெளிக்கு பிறகு தற்போது சாமானியன் என்கிற படத்தின் மூலம் மீண்டும் கதாநாயகனாகவே தமிழ் சினிமாவில் தனது பயணத்தை துவக்கியுள்ளார். இந்தப்படம் தற்போது நிறைவடைந்ததை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டு வருகிறார் ராமராஜன்.
அந்த வகையில் 7 ஆத்ரி ஃபிலிம் பேக்டரி சார்பில் தீனதயாளன் தயாரிக்கும் புதிய படம் ஒன்றில் கதாநாயகனாக நடிக்கிறார் ராமராஜன். இது அவரது 46 ஆவது படமாக உருவாகிறது. ராமராஜன் நடித்துள்ள சாமானியன் படத்தின் கதாசிரியரான கார்த்திக் குமார் V என்பவர் இந்த படத்தின் கதையை எழுதி உள்ளதுடன் இந்த படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமாகிறார்.
சாமானியன் படத்தை தயாரித்து வரும் எட்செட்ரா என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பாளர் V.மதியழகன் இந்த படத்தில் வில்லனாக நடிப்பதன் மூலம் முதன் முதலாக நடிகராகவும் அவதாரம் எடுக்கிறார்.சாமானியன் படத்தை தொடர்ந்து இந்த படத்திற்கும் இசைஞானி இளையராஜா தான் இசையமைக்கிறார்.இந்த படத்தில் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக், டீசர் ஆகியவை விரைவில் வெளியிடப்படும்.
#Ramarajan46