வேணும்னா ஒரு குத்தாட்டம் போடுறீங்களா..? : இலியானாவுக்கு செக் வைக்கும் டைரக்டர்கள்

தமிழ், தெலுங்கில் பீக்கில் இருக்கும் போதே பாலிவுட் படங்களில் நடிக்க ஆசைப்பட்டார் இலியானா.
அதற்காக தன்னைத் தேடி வந்த அத்தனை தமிழ், தெலுங்கு வாய்ப்புகளையும் சீண்டவே இல்லை.
பெரிய எதிர்பார்ப்புடம் ஹிந்திக்குச் சென்றவருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இதனால் நொந்து நூடுல்ஸ் ஆனவர் மீண்டும் தெலுங்கு மற்றும் தமிழில் யாராவது சான்ஸ் கொடுக்க மாட்டார்களா? என்று நூல் விட்டுப் பார்த்தார்.
ஆனால் ஏற்கனவே அவரால் பலபேர் படமெடுத்து நொந்ததால் ”வேணும்னா ஒரே ஒரு பாட்டுக்கு சூப்பரா ஒரு குத்தாட்டம் போட்டுட்டு போங்க” ஓ.கேவா என்று சொல்லி செக் வைக்கிறார்கள்.
அதை ஏற்க மறுத்து கோவாவுக்கு சென்றவர் அங்கு தனது பாய் ப்ரெண்டுடன் ஊரைச்சுற்றி பொழுதைக் கழிக்கிறாராம்.