லாக்டவுனுக்குப் பிறகாவது லக் அடிக்குமா?
எப்படியும் ஒரு ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் நடிகர் ஸ்ரீகாந்த். அவர் நடித்துள்ள மிருகா படம் லாக்டவுனால் லாக் ஆகி இருக்கும் நிலையில் அவர் கொடுத்துள்ள தகவல் இது..
“மிருகா படத்தின் படப்பிடிப்பு 144 தடை உத்தரவு போடும் முன்பே முடிந்துவிட்டது. தற்போது, அனைத்து பணிகளும் முடிந்து வெளியாகத் தயாராகவுள்ளது. ஊரடங்கு முடிந்து இயல்பு வாழ்க்கை திரும்பியதும், திரையரங்குகள் திறக்கப்படும். அப்போது வெளியாகும் முதல் படமாக ‘மிருகா’ இருக்கும். இதில் ராய் லட்சுமி நாயகியாக நடிக்கிறார்.
மேலும், ‘மிருகா’ படத்திற்குப் பிறகு நானும், ஹன்சிகா மோத்வானியும் இணைந்து நடிக்கும் ‘மஹா’ படத்தில் நடிகர் சிம்பு சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். கருணாகரன், தம்பி ராமையா மற்றும் பலர் நடிக்கிறார்கள். இப்படம் துப்பறியும் திரில்லர் படமாக உருவாகி வருகிறது. பாதி படம் முடிந்து விட்டது” என்றார்