பக்கத்து சீட்டில் ‘துரை சிங்கம்’ : துபாய் ரசிகர்களை குதூகலப்படுத்திய சூர்யா!

Get real time updates directly on you device, subscribe now.

Suriya

சூர்யா நடிப்பில், ஹரி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சி 3’ (சிங்கம் 3) உலகம் முழுவதும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள இப்படத்தின், முதல் சிறப்பு காட்சி துபாயில் திரையிடப்பட்டது. இந்த நிகழ்வில் நடிகர் சூர்யா பங்கேற்று, ரசிகர்களுடன் சேர்ந்து படம் பார்த்து, ரசிகர்களை குதூகலப்படுத்தினார்.

ஹயாட் ரீஜென்சியில் உள்ள ஸ்டார் கலேரியா சினிமாஸ் அரங்கில் நடைபெற்ற இந்த முதல் காட்சி திரையிடல் நிகழ்ச்சியை எஃப்டிபி அட்வர்டைசிங் மற்றும் யெஸ் ஈவண்ட்ஸ் நிறுவனங்கள் மிக சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது.

இந்த நிகழ்வில் பங்கேற்ற ஏராளமான ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் படம் குறித்து பேசியதோடு, அவர்களின் கேள்விகளுக்கும் பதில் சொன்ன சூர்யா, அவர்களுடன் சேர்ந்து படத்தையும் பார்த்து ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் தள்ளியது.

கடந்த 2013 ஆம் ஆண்டில் வெளியான ‘சிங்கம் 2’ படத்தின் தொடர்ச்சியாகவும் சிங்கம் என்ற பெயரில் தொடர்ந்து வெளிவரும் அணிவரிசையில் 3 வது திரைப்படமாகவும் ‘சி 3’ வெளிவந்திருக்கிறது. அதிரடி காவல்துறை அதிகாரியாக சூர்யா நடித்து மிக அதிகமாக எதிர்பார்க்கப்படுகின்ற இந்த திரைப்படமானது, கடந்த 9 ஆம் தேதியன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் முதல் காட்சியாக திரையிடப்பட்டது.

Related Posts
1 of 50

இத்திரைப்படத்தின் பெயரைப் போலவே, ‘துரை சிங்கம்’ என்ற பெயரில் அதிரடி காவல்துறை அதிகாரியாக வரும் சூர்யா, ஊழல் பேர்வழிகளை அழித்தொழித்து நீதியை நிலைநாட்டும் நடவடிக்கையில் அதிரடியாக களம் காண்கிறார். இத்திரைப்படத்தில் அனுஷ்கா ஷெட்டி, ஸ்ருதிஹாசன் ஆகிய இருவரும் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். ஸ்டுடியோ க்ரீன் மற்றும் பெண் மூவி நிறுவனங்கள் தயாரித்துள்ள இந்த ஆக்‌ஷன் மசாலா திரைப்படமானது, இயக்குநர் ஹரி – சூர்யா கூட்டணியில் உருவாகியுள்ள 5 வது படமாகும்.

ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் அனைத்துப் பாடல்களும் சூப்பர் ஹிட் பாடல்களாக அமைந்திருக்க, ப்ரியனின் ஒளிப்பதிவு படத்தை பிரமிக்க வைத்துள்ளது.

துபாயில் சி 3 பிரிமீயர் நிகழ்வானது, டான்யூப் ப்ராபர்ட்டிஸ், க்ளியர் வாட்டர், என்.எஸ்.கே பிரிண்ட்ஸ், மலபார் கோலடு & டைமண்ட்ஸ், ஆப்பக்கடை, ப்ளாக் துலிப் ஃப்ளவர்ஸ், புர்வங்கரா, பார்ஸ் ஃபிலிம், கோல்டன் சினிமாஸ், ட் ஹமிழ் 89.4 எஃப்.எம் – அதிகாரப்பூர்வ தமிழ் பார்ட்னர் & கிளப் எஃப்.எம் – அதிகாரப்பூர்வ மலையாளம் ரேடியோ பார்ட்னர் மற்றும் தொலைக்காட்சி பார்ட்னராக சினி டிவி ஆகியோரின் ஆதரவோடு நடைபெற்றது.

எஃப்டிவி மீடியா & அட்வர்டைசிங் எல்.எல்.எசி, 2013 ஆம் ஆண்டில் UAE-ல் தன் செயல்பாட்டை தொடங்கியது. ஒவ்வொரு செயல்பாட்டிலும் கேளிக்கை, சிந்தனை மற்றும் பேரார்வத்தை கொண்டிருக்க வேண்டுமென்ற எஃப்டிபி-ன் கூர்நோக்கமானது, தனது மதிப்புமிக்க வாடிக்கையாளர்களின் பல்வேறு வகைப்பட்ட சந்தையாக்கல் மற்றும் பிராண்டின் தேவைப்பாடுகளை பூர்த்தி செய்ய பல்வேறு ஊடக சேனல்கள் வழியாக புதுமையான ஊடகத்தீர்வுகளை வழங்குவதாக இருக்கிறது.

2015 ஆம் ஆண்டில் இந்நிறுவனம் அதன் செயல்பாடுகளை சிங்கப்பூர் மற்றும் இந்தியாவுக்கும் விரிவாக்கம் செய்தது. சிவகார்த்திகேயன் ரசிகர்கள் சந்திப்பான ‘மீட் த ரெமோ’, சென்னையின் டிஜிட்டல் வடிவத்தில் பாட்ஷா. துபாயில் ‘பைரவா’ படத்தின் உலக பிரிமீயர், நடிகர் விக்ரமுடன் துபாயில் ‘இருமுகன்’ திரைபப்டத்தின் உலக பிரீமியர் மற்றும் சிங்கம் 3 பிரிமீயர் நிகழ்ச்சிக்காக ‘சி யுவர் சிங்கம்’ என்ற பெயரில் ரசிகர்களோடு சூர்யாவின் பிரத்யேக சந்திப்பு ஆகிய நிகழ்ச்சிகள், எஃப்டிவி வெற்றிகரமாக நடத்திய சமீபத்திய நிகழ்வுகளாகும்.