மதிமாறன்- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

உடல் குறைபாடு உள்ளவர்கள் பற்றிய மாற்றுச் சிந்தனை சமூகத்துக்கு வேண்டும் என போதிக்கிறது மதிமாறன்

நெல்லை மாவட்டத்தில் துவங்குகிறது கதை. கதையின் நாயகன் வெங்கட் செங்குட்டுவன் லட்சியம் தன் அப்பா எம்.எஸ்.பாஸ்கர் போலவே போஸ்ட்மேன் ஆகவேண்டும் என்பது. அவரது படிப்புக்கும் திறமைக்கும் அவரது உயரமும் அந்த உயரத்தை வைத்து பலர் செய்யும் கேலிகளும் குறுக்கே நிற்கவில்லை..நின்றாலும் அதைத் தாண்டிச் செல்கிறார் ஹீரோ. இப்படியான பாசிட்டிவ் அம்சத்தோடு துவங்கும் கதையில் சில எமோஷ்னல் ட்விஸ்ட் வருகிறது. அந்த ட்விஸ்ட் என்ன? அதன்பின் நடப்பவை என்னென்ன? என்பதே மதிமாறன் கதை

வெங்கட் செங்கட்டுவன் எதார்த்தமாக நடித்துள்ளார். உயரம் குறித்த எந்த பதட்டமும் இல்லாத அவரின் நேச்சுரல்.ஆட்டிட்யூட் படத்தில் அவரது கேரக்டருக்கு ப்ளஸ் ஆக அமைந்துள்ளது. நாம் எதிர்பாராத ரோலில் நடித்துள்ளார் இவானா. அவரது கேரக்டரில் அழுத்தமில்லை. எம்.எஸ் பாஸ்கர் தான் நடிக்கும் எல்லா காட்சிகளையும் உயிர்ப்புள்ளதாக மாற்றுகிறார். ஆராத்யா கச்சிதமான நடிப்பால் கவர்கிறார்

கார்த்திக் ராஜாவின் பின்னணி இசை வெகுநாட்களுக்குப் பிறகு உயிரோட்டமாக அமைந்துள்ளது. பாடல்களும் ஒகே ரகம். பர்வேஸின் விஷுவல் கதையை இயல்பாக சொல்ல உதவியுள்ளது. கேரக்டர்களின் குணாதிசயங்களை வெளிப்படுத்தும் சில ஷாட்களை வைத்திருக்கலாம்

ஒரு நல்ல நேட்டிவிட்டி மற்றும் எமோஷ்னலோடு துவங்கிய படம் அப்படியே பயணிக்காமல் ஆங்காங்கே தடம் மாறி தடுமாறிவிட்டது. ஊனம் என்பது ஒரு மேட்டரே அல்ல என்பதை ஸ்ட்ராங்காகச் சொன்னவிதம் அல்டிமேட்! ஒரு படத்திற்குள் இரு உணர்வுகளாக கதை பிரிந்து விட்டால் மதிமாறன் நம்மோடு ஒட்டவில்லை.. இருப்பினும் ரசனைக்கு பெரிதாக நஷ்டமில்லை
2.75/5