நகைச்சுவைப் பயணம் தொடரும். – வடிவேலு!
‘எனது பயணம் நகைச்சுவை பயணமாக இனி தொடரும். சாகும்வரை நகைச்சுவை நடிகனாக தொடர வேண்டும் என்பதே எனது ஆசை’ என ‘வைகைப்புயல்’ வடிவேலு தெரிவித்தார்.
லைகா நிறுவனம் சார்பில் ‘புரொடக்சன் 23’ என்ற பெயரில் தயாராகும் புதிய பெயரிடப்படாத படத்தில் ‘வைகைப்புயல்’ வடிவேலு கதையின் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தை இயக்குனர் சுராஜ் இயக்குகிறார். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற விழாவில் வெளியிடப்பட்டது.
இந்நிகழ்வில் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு வடிவேலு பதிலளித்தார். அரசியல் சார்ந்த கேள்விகளை தவிர்த்தார். பாட்டு பாடினார். அவர்களின் விருப்பப்படி ‘பஞ்ச் டயலாக்’ பேசி அனைவரையும் கலகலப்பாக சிரிக்க வைத்தார்.