முடக்கறுத்தான் படத்தில் சிற்பி பழனிபாரதி!

Get real time updates directly on you device, subscribe now.

நீண்ட இடைவெளிக்கு பிறகு இசையமைப்பாளர் சிற்பி & பழனி பாரதி இணையும் புதிய படம் முடக்கறுத்தான் . தற்போது K .வீரபாபு ‘முடக்கறுத்தான் ‘ எனும் புதிய படத்தை இயக்கி நடிக்கிறார் .

இப்படத்தை வயல் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.அருள் செல்வன் ஒளிப்பதிவு செய்ய , சிற்பி இசையமைக்கிறார். மேலும் இப்படத்திற்கு பழனி பாரதி பாடல்களை எழுதுகிறார் .நீண்ட இடைவெளிக்கு பிறகு இசையமைப்பாளர் சிற்பி & பழனி பாரதி இணையும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது .படத்தொகுப்பினை ஆகாஷும் , சண்டை பயிற்சியை சூப்பர் சுபராயனும் மேற்கொள்கிறார்கள் . கதை நாயகியாக மஹானா நடிக்கிறார் .

இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது . படக்குழுவினர் மற்றும் சிறப்பு அழைப்பாளராக சுரேஷ் காமாட்சி மற்றும் பலர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர் .