விஜய் சேதுபதி வெளியிட்ட’நினைவில் ஒளிரும் ஜிமிக்கி கம்மல்’!

Get real time updates directly on you device, subscribe now.

திரைப்பட இயக்குநரும், நடிகரும், எழுத்தாளருமான சீனு. ராமசாமி எழுதிய ‘நினைவில் ஒளிரும் ஜிமிக்கி கம்மல்’ எனும் கவிதை நூலினை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்டார்.

தேசிய விருதினை பெற்ற திரைப்பட படைப்புகளை உருவாக்கிய இயக்குநர் சீனு. ராமசாமி இலக்கிய உலகிலும் தன்னுடைய தடத்தினை பதித்திருக்கிறார். இவர் ‘நினைவில் ஒளிரும் ஜிமிக்கி கம்மல்’ எனும் கவிதை நூலை எழுதியிருக்கிறார். இந்த நூல் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த நூல் வெளியீட்டு விழாவிற்கு எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். வரவேற்புரையை பாரதி புத்தகாலயம் பதிப்பக உரிமையாளர் க. நாகராஜன் நிகழ்த்தினார். கவிஞர் நந்தலாலா இந்த நூலுக்கான ஆய்வுரை அளிக்க..’ மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வாழ்த்துரை வழங்கினார். இறுதியாக எழுத்தாளரும், இயக்குநருமான சீனு. ராமசாமி நன்றி உரையாற்றினார்.

இந்நிகழ்வில் ஏராளமான வளரும் கவிஞர்களும் புத்தக வாசிப்பாளர்களும் இலக்கிய ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.