15 பேர் முன்னிலையில் நிர்வாணமாக நடித்த அமலாபால்!

Get real time updates directly on you device, subscribe now.

‘மேயாத மான்’ படத்தைத் தொடர்ந்து ரத்னகுமார் இயக்கத்தில் தயாராகி வரும் படம் ‘ஆடை’.

படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரே பெரும் சர்ச்சையை கிளப்பிய இப்படத்தில் ஆடையில்லாமல் நடித்திருக்கிறார் நடிகை அமலாபால்.

நாயகியை மையமாக வைத்து தயாராகியிருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. அதில் கலந்து கொண்டு அமலாபால் பேசியதாவது, ”இந்தப்படம் ஆரம்பித்ததிலிருந்து இதுவரை நீண்ட பயணம் அழகிய பயணமாக இருந்தது.

Related Posts
1 of 144

கதாநாயகியை மையப்படுத்தி எடுக்கப்படம் படம் அவள் தியாகியாகவோ, பாதிக்கப்பட்ட பெண்ணாகவோ அதிலிருந்து அவர் எப்படி மீள்கிறாள் என்ற கருத்தில் உடன்பாடில்லாமல் ஒரு கதையைக் கேட்டு படம் நடிப்பதையே விட்டுவிட முடிவு செய்திருந்த நேரத்தில் தான் ஆடை படத்தின் கதையைப் படித்ததும் உற்சாகமாக ஒப்புக் கொண்டேன்.

இருப்பினும், படப்பிடிப்பு ஆரம்பிக்கும்போது ஒரு சிறு தயக்கம் இருந்தது. உடனே இயக்குநரிடம் நாம் அனைவரும் ஒரு குழுவாக பணியாற்றினால் தான் இப்படம் சிறந்த படமாக வரும் என்று கூறினேன். அதை அவர் ஏற்றுக் கொண்டதால் அனைவரும் ஒன்றாக பணியாற்றினோம். ஒரு காட்சியில் நடிக்கும்போது நீங்கள் யாரோ போல நடிக்காதீர்கள். நீங்கள் நீங்களாகவே இருங்கள் என்று கூறினார்.

பல பேருக்கு தெரியாது ரத்னகுமாருக்கு ‘ஆடை’ படம் தான் முதல் படம் என்று. அவர் பன்முக திறமை வாய்ந்தவர். ரம்யா இனிமேல் தொகுப்பாளினி இல்லை. சினிமாத் துறைக்கு மற்றுமொரு நடிகை கிடைத்துவிட்டார். முதல் நாள் படப்பிடிப்பில் நான் எனக்கு பாதுகாப்பு இருக்குமா? என்று நினைத்தேன். ஏனென்றால், நான் ஆடையில்லாமல் நிர்வாணமாக நடித்த காட்சிகளை படமாக்கும் போது ஒளிப்பதிவாளர்களையும் சேர்த்து மொத்தம் 15 பேர் இருந்தார்கள். அவர்கள் அனைவரும் எனக்கு பாதுகாப்பாக இருந்தார்கள்” என்றார்.