அடுத்த வருஷம் பாருங்க, விமல் வேற லெவல்ல இருப்பாப்ல!

Get real time updates directly on you device, subscribe now.

vimal

யதார்த்தமான நடிப்பை திரையில் முழுதாகக் காட்டுகிற ஒரு சில ஹீரோக்களில் முக்கியமானவர் நடிகர் விமல்.

மாப்பிள்ளை சிங்கம் படத்துக்குப் பிறகு இந்த ஆண்டு விமலுக்கு எந்தப்படமும் ரிலீசாகவில்லை. ஆனாலும் மனுஷன் படு உற்சாகமாக இருக்கிறார் என்றால் அதற்கு காரணம் அடுத்தடுத்து வரிசைக்கட்டப்போகும் படங்கள் தான்.

Related Posts
1 of 8

பூபதி பாண்டியன் இயக்கத்தில் நடிக்கும் ‘மன்னர் வகையறா” படம் நிறைவடையும் நிலையில் இருக்கிறது. விரைவில் அந்தப்படம் திரைக்கு வர உள்ள நிலையில் அடுத்து சுசீந்திரன் தயாரிக்க அவரது உதவியாளர் சிவா இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறாராம். இந்த படத்தில் இமான் இசை, விஜய் மில்டன் ஒளிப்பதிவு, பாண்டிராஜ் வசனம் என பிரபலங்கள் இணைகிறார்கள்.

அதோடு ராஜதந்திரம் இயக்குனர் அமீத் படத்திலும் நடிக்க இருக்கிறேன். இத்துடன் இன்னும் நான்கு பிரபலங்களின் படங்களும் பேச்சு வார்த்தையில் இருக்கிறது. என்று சொல்லும் விமல் 2017 ம் ஆண்டு எனக்கு புதுத் தெம்பைத் தருவதாக இருக்கும் என்கிறார் நம்பிக்கையுடன்!

நம்பிக்கை அதானே எல்லாம்!