ஆண்ட்ரியா நடிக்கும் புதிய படம்!

Get real time updates directly on you device, subscribe now.

தரமான படைப்புகளை தொடர்ந்து அளித்து வரும் தயாரிப்பாளர் சுஜாதா விஜய்குமார் அவர்களின் ஹோம் மூவி மேக்கர்ஸ் தற்போது பிரபல நடன இயக்குனர் பாபி ஆண்டனி இயக்குனராக அறிமுகமாகும்”புரொடக்‌ஷன் No.3″ படத்தை பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கின்றது.

Related Posts
1 of 6

நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க,  ஆஷா சரத், காளி வெங்கட், சந்தோஷ் பிரதாப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். உடன் ஷா ரா, ஜப்பான் குமார், வினோதினி, பால சரவணன், யுவலக்‌ஷ்மி ஆகியோர் நடிக்கின்றனர்.

படத்திற்கு ஒளிப்பதிவை அகில் ஜார்ஜ் மேற்கொள்ள, ரான் ஈதன் யோஹன் இசையமைக்கிறார்.இன்று இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இனிதே துவங்கியது.