நடிகர் சங்க கட்டிட நிதிக்காக 3 லட்சம் நன்கொடை கொடுத்த நிக்கி கல்ராணி!

Get real time updates directly on you device, subscribe now.

nikki

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு சொந்தமாக கட்டிடம் கட்டும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

கட்டிடம் கட்டுவதற்கான அரசு அனுமதிகளும் கிடைத்த நிலையில், கட்டிட நிதிகளையும் நடிகர் நடிகைகள் தாமாகவே முன் வந்து நன்கொடைகளாக அளித்து வருகின்றனர்.

Related Posts
1 of 32

கட்டிடத்தில் சிறிய திருமண மண்டபத்தை கட்டுவதற்கான செலவை நடிகர் சங்கம் அறங்காவலர் ஐசரி கணேஷ் மற்றும் ப்ரிவியூவ் தியேட்டர் கட்டும் செலவை சிவகுமார், சூர்யா, கார்த்தி குடும்பத்தாரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். பழம்பெரும் நடிகை வாணிஸ்ரீ – ரூபாய் 1,55,555/, ராதா- ரூபாய் 1,00,000/, ஜனனி – ரூபாய் 40,000/, சத்யப்பிரியா- ரூபாய் 25,000=,ஜெயசித்ரா ரூபாய் 10,000/, நடிகர் சங்கம் பி.ஆர். ஒ. ஜான்சன் – ரூபாய் 60,000/ நன்கொடை அளித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து நடிகை நிக்கி கல்ராணி 3 லட்சம் ரூபாய் கட்டிட நிதிக்காக நன்கொடை வழங்கி உள்ளார். இதற்கான காசோலையை அவர் நடிகர் சங்கம் அலுவலகத்தில் நேரில் சென்று சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் ஸ்ரீமன் அவர்களிடம் வழங்கினார்.

ஏற்கனவே நடிகர் சங்கப் பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி ஆகியோர் தலா 5 கோடி ரூபாய் நன்கொடை அளிப்பதாக அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.