அடக்குனா அடங்குற ஆளு இல்ல சாக்‌ஷி. நம்பலைன்னாலும் இதான் நிஜம்?

Get real time updates directly on you device, subscribe now.


சில நாட்களுக்கு முன் நடிகை சாக்‌ஷி அகர்வால், தன்னை டிக்டாக்லிருந்து விலக்கி கொண்டு சீனாவில் தயாரிக்கப்படும் பொருட்களை உபயோகப்படுத்த போவதில்லை என்ற உயர்ந்த முடிவு ஒன்றை எடுத்திருந்தார். சீன தயாரிப்புகளின் விளம்பரங்களில் நடிப்பது இல்லை என்றும் முடிவு செய்துள்ளதாக அறிவித்தார். அவரின் வாய் முகர்த்தம் தான் கவர்மெண்ட் வரை எட்டியதாக அவரே நம்புகிறார். இதற்காக அவர் கலாய்க்கப்படலாம். ஆனாலும் அவர் கலங்குவதில்லை என்பதை அவரது ட்விட்டர் நடவடிக்கைகள் காட்டுகின்றன. மேலும் மத்திய அரசு டிக் டாக், யுசி பிரவுசர் உட்பட சீனாவின் 59 செல்போன் செயலிகளுக்குத் தடை விதித்திருப்பதை அறிந்து தனது நன்றியை தெரிவித்துள்ளார் நடிகை சாக்‌ஷி அகர்வால் இது இந்தியாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் முக்கிய முடிவு என்றும், இந்த முடிவு இந்தியாவின் சுயசார்பு திறனை மேம்படுத்தும் என்று கூறியுள்ளார்.