குலசாமி- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

விமலை வைத்து ஒரு ஆக்‌ஷன் திரில்லர் என இயக்குநர் எடுத்துள்ள விபரீத முடிவே குலசாமி

எந்நேரமும் குடி, முடிந்தவளவிற்கு மருத்துவ கல்லூரி மாணவிகளுக்கு உதவி என வாழ்ந்து வருகிறார் விமல். மேலும் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்கள் ஒருபுறம் காட்டப்படுகிறது. விமல் எப்படி பாலியல் ரீதியாக பெண்களை துன்புறுத்தும் வில்லன்களை வேட்டையாடுகிறார் என்பதே குலசாமியின் மீதிக்கதை

சமீபகாலமாக திரையில் டல்லாகவே தெரியும் விமல் இப்படத்தில் மேலும் டல்லாக நடித்துள்ளார். நாயகி தான்யாஹோப் விமலுக்கு பயங்கர டப் கொடுத்துள்ளார் நடிப்பில். ஓகே அதர் ஆர்டிஸ்ட் பெர்பாமன்ஸ் எப்படி? என்றால் முத்துப்பாண்டி போஸ்வெங்கட் உள்ளிட்ட ஒருசிலர் மட்டுமே ஓகே ரகம். வில்லன் டீமில் உள்ள அனைவருமே கொடுத்த காசுக்கு மேல் கூவி ஓவர் நடிப்பை அள்ளித்தட்டியுள்ளனர்

இசை எனும் இம்சையை அள்ளி அள்ளி தந்திருக்கிறார் இசையமைப்பாளர். கவனத்தில் நிற்கும்படி ஒரு பாடலும் இல்லை. ஒளிப்பதிவும் எந்த எக்ஸ்ட்ரா எபெக்டையும் கொடுக்கவில்லை. எடிட்டிங் சைடிலும் நிறைய சொதப்பல். ஒட்டுமொத்த டெக்னிக்கல் டீமும் படத்தோடு ஒட்டாமல் வேலை செய்துள்ளன

பெண்களுக்கு எதிராக உளவியல் யுத்தம் நடத்தி, அதன் மூலம் பெண்களை பணக்காரர்களின் ஆசைக்கு இணங்க வைக்கும் கும்பலை வெளிச்சம் போட்டு காட்டிய இடங்களில் இயக்குநர் கவனிக்கப்படுகிறார் தான். ஆனால் அதை சரியாக நேர்கோட்டோடுச் சொல்லாமல் தானும் குழம்பி ரசிகர்களையும் குழப்பியிருக்கிறார் இயக்குநர்

குலசாமி- ஆளவிடு சாமி
1.5/5

#குலசாமி #kulasamy