என்னய்யா படமெடுக்கிற..? : டைரக்டருடன் மல்லு கட்டிய நடிகை!

Get real time updates directly on you device, subscribe now.

saloni

‘சரபம்’ படத்தின் நாயகியாக அறிமுகமானவர் சலோனி. படத்தின் டைட்டிலைப் போலவே படமும் மக்களிடம் எடுபடாததால் தோல்வியைத் தழுவ புதுப்பட வாய்ப்புகள் இல்லாமல் சொந்த ஊருக்கு வண்டியேறினார்.

அங்கு ஒரு நாடகத்துக்கான ஒத்திகையில் இருந்தவரை எப்படியோ தேடிப்பிடித்து நடிகர் நாசரின் மகன் நடிக்கும் புதுப்படம் ஒன்றில் கமிட் செய்திருக்கிறார்கள்.

அவரும் சரி மீண்டும் ஒரு தமிழ்ப்பட வாய்ப்பு கிடைக்கிறதே என்கிற சந்தோஷத்தில் நாடகத்தை கடாசி விட்டு படப்பிடிப்புக்காக சிங்கப்பூர் சென்றிருக்கிறார்.

Related Posts
1 of 4

போன இடத்தில் தான் ஆரம்பித்திருக்கிறது இயக்குநருக்கும், அவருக்குமான பஞ்சாயத்து.

என்கிட்ட டைரக்டர் சொன்ன கதை வேறாகவும், எடுக்கிற காட்சிகள் வேறாகவும் இருந்தது. அதை இயக்குநரிடம் கேட்டபோது எந்த பதிலும் சொல்லவில்லை.

இதனால் எனக்குப் பிடிக்காத கேரக்டரில் நடிக்க சம்மதம் சொல்லமுடியவில்லை. அது மட்டுமில்லாமல் அந்தப் படப்பிடிப்பே எனக்கு ஒரு கசப்பான அனுபவமாக இருந்தது. அதனால் அந்தப்படத்திலிருந்து வெளியேறி விட்டேன் என்று கூறியிருக்கிறார்.

என்னப்பா பண்ணினீங்க இந்தப் பாப்பாவை..?