”நிர்வாணமாக நடித்தாலும் கணவர் ஒன்றும் சொல்ல மாட்டார்” – ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த நடிகை!

Get real time updates directly on you device, subscribe now.

பெரும்பாலும் நடிகைகள் திருமணத்திற்கு பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டு விட்டு குடும்பம், குழந்தை, குட்டி என்று கணவரோடு செட்டில் ஆகி விடுவார்கள்.

விதி விலக்காக சில நடிகைகள் மட்டுமே திருமணத்துக்குப் பிறகும் படங்களில் நடிப்பார்கள். அப்படி நடித்தால் கூட கதாநாயகி கேரக்டரில் கவர்ச்சியாக நடிக்காமல், அக்கா, அண்ணி, அம்மா என மற்ற குணச்சித்திர கேரக்டர்களில் நடிப்பார்கள். கணவர் போடுகிற கட்டுப்பாடுகள் தான் இதற்கு முக்கிய காரணமாக இருக்கும்.

இப்படிப்பட்ட நடிகைகளுக்கு ”நான் எப்படி நடித்தாலும் என் கணவர் ஒன்றும் சொல்ல மாட்டார்” என்று இன்ப அதிர்ச்சி கொடுக்கிறார் நடிகை சர்வீன் சாவ்லா.

மூன்று பேர் மூன்று காதல், ஜெய் ஹிந்த்2 உட்பட சில தமிழ்ப்படங்களில் நடித்துள்ள சர்வீன் சாவ்லா கடந்த 2015 – ல் ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். மூன்று வருடங்களாக தனக்கு திருமணம் நடந்ததையே வெளியில் சொல்லாமல் மறைத்து படங்களில் கவர்ச்சி காட்டி நடித்து வந்தார்.

அவர் தான் “என் கணவர் நான் படங்களில் நடிக்கும் போது சேர்ந்து நடிக்கும் நடிகரை கிஸ் செய்தாலும்.. காட்சிகளில் நிர்வாணமாக நடித்தாலும் எதுவும் சொல்ல மாட்டார். இதை விட எனக்கு வேறென்ன வேண்டும். அதனால் தான் அவரை திருமணம் செய்து கொண்டேன்” என்று கூறியிருக்கிறார்.

யாருப்பா அந்த மாப்பிள்ளை அவரை இப்பவே பார்க்கணும் போல இருக்கே?