”போராடக்கூடாது என்று சொல்வது பைத்தியக்காரத்தனம்..!” – ஆவேசப்பட்ட எஸ்.ஏ.சந்திரசேகரன்

Get real time updates directly on you device, subscribe now.

மூகப் போராளியான ‘டிராஃபிக் ராமசாமி’யின் வாழ்க்கை வரலாற்றை பின்னணியாகக் கொண்டு தயாராகியிருக்கும் படம் ‘டிராஃபிக் ராமசாமி’.

கிரீன் சிக்னல் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் விக்கி இயக்கியிருக்கும் இப்படத்தில் ‘டிராஃபிக் ராமசாமி’யாக இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன் நடித்திருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. படத்தின் பாடல்களைக் கவிப்பேரரசு வைரமுத்து வெளியிட இயக்குநர் ஷங்கர் பெற்றுக் கொண்டார்.

விழாவில் இயக்குநரும் கதை நாயகனுமான எஸ்.ஏ. சந்திரசேகரன் பேசும் போது ஆவேசமாகப் பேசினார்… “நான் 40 நாட்களுக்கு முன்பு இவ்விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று கவிப்பேரரசு வைரமுத்து அவர்களிடம் கேட்டபோது விழா எப்போது? என்றவர் , எங்கிருந்தாலும் வருவேன் என்றார். அவருக்கு நன்றி. காதலா, கோபமா, வீரமா, சமூக சிந்தனையா, மண் வாசனையா எனதயும் வித்தியாசமான முறையில் எழுதுபவர் அவர்.

உலகமே வியக்கும் ஷங்கருக்கு மெசேஜ்தான் அனுப்பினேன். உறுதியாக வருவேன் என்றார். அவருக்கு நன்றி. அவர் என்னிடம் புத்திசாலித்தனமாக இருந்தவர். அதனால் தான் என்னுடன் 17 படங்களில் பணியாற்ற முடிந்தது.

Related Posts
1 of 2

இந்த விக்கி என்னுடன் 6 ஆண்டுகள் இருந்தார். அவர் சொன்ன கதைகள் பிடிக்கவில்லை என்று சொல்லி வந்தேன். ஒரு நாள் டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கைக் கதையைப் படிக்கக் கொடுத்தார். இரவே படித்து விட்டேன். மறுநாளே படமாக எடுக்கலாம் என்றேன். முடிவு செய்ததும் ஐந்தாறு முறை டிராபிக் ராமசாமியைப் போய்ப் பார்த்தேன். அவரது நடை உடை பாவனைகளை உற்று நோக்கினேன். எனக்குள் பொருத்திக் கொண்டேன்.

இது வாழ்க்கை முழுக்க போராடி வரும் ஒருவரின் கதை. போராட வயது தேவையில்லை. போராடாமல் எதுவும் கிடைக்காது. தாயிடம் பால் குடிக்க வேண்டும் என்றால் கூட குழந்தை அழுதால் தான் கிடைக்கும், போராட வேண்டாம் என்றால் எப்படி? காந்தி போராடவில்லை என்றால் சுதந்திரம் கிடைத்து இருக்குமா? மெரினா போராட்டம் தானே நம் கலாச்சாரத்தை மீட்டு கொடுத்தது? தூத்துக்குடி போராட்டம் தானே ஒரு ஆலையை மூட வைத்தது? போராட வேண்டாம் என்று சொல்வது பைத்தியக்காரத்தனம். டிராபிக் ராமசாமியிடம் நானும் நிறைய கற்றுக் கொண்டேன். இப்படம் ஒரு யதார்த்தமான பதிவாக இருக்கும்” என்றார் எஸ்.ஏ.சந்திரசேகரன்.

இயக்குநர் ஷங்கர் பேசும் போது “இந்த டிராஃபிக் ராமசாமி என்னையும் பாதித்த மனிதர். அவருக்குள் ஒரு ஹீரோயிசம் இருக்கும். அதைப் பார்த்து நான் மனசுக்குள் கை தட்டியதுண்டு. இவர் கதையைப் படமாக்க நானும் ஆசைப்பட்டேன். எனக்கும் அப்படி ஆசை இருந்தது. இவர் கத்தி எடுக்காத இந்தியன். வயசான அந்நியன் அம்பி. இவர் கதையில் ரஜினி சாரை வைத்து எடுக்கக் கூட நினைத்தேன். எஸ்.ஏ.சி. சார் நடிக்கிறார் என்று அறிவிப்பு வந்ததும் ‘வட போச்சே..’ என்ற ஏமாற்றம். இருந்தாலும் மகிழ்ச்சி. இந்தப் படத்தைப் பார்க்க நான் காத்திருக்கிறேன்.” என்றார்.