தமன்னாவின் ”அடேங்கப்பா…” மேரேஜ் ப்ளான்!

Get real time updates directly on you device, subscribe now.

Tamanna1

மேக்கப் போடாமலேயே பார்த்தால் கூட வெள்ளாவியில் வைத்து வெளுத்தெடுத்தவர் போலத்தான் இருப்பார் நடிகை தமன்னா.

நடிப்பிலும், கவர்ச்சியிலும் எந்தக்குறையும் வைக்காமல் நடிக்கும் அவருக்கு சமீபத்தில் ரிலீசான பாகுபலி நல்ல பெயரையும், பாராட்டையும் பெற்றுக் கொடுத்தது.

இருந்தாலும் தொடர்ந்து புதுப்பட வாய்ப்புகள் வராததால் கிடைக்கிற வாய்ப்புகளில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதோடு தேடிவரும் விளம்பர வாய்ப்புகளையும் விட்டு விடாத தமன்னா கூடிய சீக்கிரம் திருமணத்துக்கு தயாராகி விடுவார் போலிருக்கிறது.

Related Posts
1 of 8

வயது ஏறிக்கொண்டே போவதால் அவருடைய பெற்றோரும் கட்டாயப்படுத்துகிறார்களாம். இந்த நேரத்தில் தனது திருமண ஆசையை வெளிப்படுத்தியிருக்கும் அவர் இதுவரை எந்த நடிகையும் சொல்லாத ஆசையாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

மறைந்த இங்கிலாந்து இளவரசி டயானா அவரது திருமணத்தில் அலங்காரம் செய்திருந்தது போல நானும் என்னுடைய திருமணத்தில் அலங்காரம் செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

ஆசை நிறைவேறட்டும்!