விஜய் படத்துக்கு ‘கபாலி’ ரஞ்சித் வைக்கப்போகும் டைட்டில்? : கசிந்தது ரகசியம்!

Get real time updates directly on you device, subscribe now.

Ranjith

‘கபாலி’யின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் மும்முரமாகியிருக்கிறார் டைரக்டர் ரஞ்சித்.

முன்னதாக சூர்யாவை வைத்து அவர் ஒரு படத்தை இயக்கப் போவதாகவும், ஆனால் சூர்யா ரஞ்சித்திடம் கதையில் சில மாற்றங்களை செய்யச் சொன்னதால் ரஞ்சித்துக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அந்தப்படத்தையே ட்ராப் செய்து விட்டதாகவும் கூறப்பட்டது.

சூர்யா கை விட்டாலும் தனது கதை மீதான நம்பிக்கையில் இன்னொரு மாஸ் ஹீரோவான விஜய்யின் கால்ஷூட்டுக்காக காத்திருக்கிறார் இயக்குநர் ரஞ்சித்

Related Posts
1 of 92

தற்போது விஜய் 60 படத்தில் நடித்து வரும் விஜய் அந்தப்படம் முடியவும் தான் தனது அடுத்த படத்துக்கு கதை கேட்கும் முடிவில் இருக்கிறார்.

அந்த வெயிட்டிங் லிஸ்டில் ரஞ்சித்தும் இருக்கிறார் என்பது ஒருபுறமிருக்க விஜய்யை வைத்து தான் இயக்கப் போகும் படத்துக்கான டைட்டில் ரகசியம் தற்போது வெளியாகியிருக்கிறது.

ஆமாம், விஜய்யை வைத்து ரஞ்சித் இயக்க நினைத்திருக்கும் படத்துக்கு சார்பட்டா பரம்பரை என்கிற டைட்டிலை வைத்திருக்கிறாராம்.