அகத்தியா- விமர்சனம்

ஹாரர் கலந்து தமிழ் மரபைப் பேசும் படம்
பாண்டிச்சேரியில் ஒரு ஷுட்டிங் செட்-ஐ கேரி ஹவுஸ் ஆக மாற்றுகிறார்கள் ஜீவா ராஷிகண்ணா குழுவினர். அந்த கேரி ஹவுஸில் இருந்து சில பேய்கள் வெளி வருகின்றன. அந்தப் பேய்கள் வழியாக ஜீவாவிற்கு நிறைய சித்த மருத்துவம் தொடர்பான தகவல்கள் கிடைக்கின்றன. அங்கு நல்ல பேய்களும் உள்ளன.. கெட்டப் பேய்களும் உள்ளன. முடிவில் பேய்கள் மூலம் ஜீவாவிற்கு கிடைக்க வேண்டியது கிடைத்ததா? இதுதான் கதை
ஜீவா ஷுட்டிங் ஸ்பாட் ஆர்ட் டைரக்டர் போல டென்சனிலே படத்திற்குள்ளும் சுற்றுகிறார். இன்னும் அழுத்தமான நடிப்பை அவர் வழங்கியிருக்கலாம். அர்ஜுன், தான் ஏற்றுக்கொண்ட கேரக்டரின் கணம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளார். வில்லனாக வரும் எட்வர்ட் அசத்தியுள்ளார். ராஷி கண்ணா படத்திற்குள் ஒரு ராசி இல்லாத ஜீவனாக சுற்றுகிறார். ரோஹினி, ராதாரவி, கிங்ஸ்ட்லி உள்ளிட்ட மற்ற கேரக்டர்கள் ஓகே. அபிராமி கேரக்டரை வீணடித்துள்ளனர்
தீபக்குமார் பதி தனது ஒளிப்பதிவைச் சிறப்பாகச் செய்துள்ளார். சிஜி பணிகளும் பரவாயில்லை ரகம். யுவன் சங்கர் ராஜா இசையில் ஒரு பாடல் தேறுகிறது. பின்னணி இசை படத்தை ஆங்காங்கே தேற்றுகிறது
ஒரு நல்ல ஆழமான விசயத்தைப் படம் பேசியுள்ளது. “உணவே மருந்து” என்ற மரபு கொண்டவர்கள் நம் தமிழர்கள்..மேலும் நமது பதினெட்டுச் சித்தர்களும் எத்தனையோ மூலிகைகள் மூலம் நிறைய மருந்துகளை நமக்குத் தந்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். இவற்றை எல்லாம் படம் தொட்டிருக்கிறது. அதேநேரம் இவை யாவும் கமர்சியல் மீட்டருக்குள் இல்லை. இதுதான் அகத்தியாவின் பெரும் குறை. கேரக்டர்களை இன்னும் ஸ்ட்ராங் செய்து, காட்சிகளை இன்னும் இம்ரூவைஸ் செய்திருந்தால் அகத்தியா வெற்றி மலை ஏறியிருக்கும்
2.5/5