மீண்டும் இணையும் நாயகன் கூட்டணி?

Get real time updates directly on you device, subscribe now.

kamal

ணிரத்னம் இயக்கிய படங்களில் நாயகன் படம் முக்கியமான படம். உலக நாயகன் கமல்ஹாசன் ஹீரோவாக நடித்த இந்தப்படம் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

வேலு நாயக்கர் என்கிற கேரக்டரில் கமல் நடிப்பில் பின்னி பெடலெடுத்திருப்பார். பல படங்களில் கமல் கேரக்டரை இமேடேட் செய்து காமெடி காட்சிகள் கூட இயக்குநர்கள் வைப்பதுண்டு.

அந்தளவுக்கு மெகா ஹிட்டான அந்தப்படத்துக்குப் பிறகு இந்த வெற்றிக்கூட்டணி வெற்றுக்கூட்டணி ஆகி விட்டது.

இப்போது ஆண்டுகள் பல கடந்து விட்ட நிலையில் கமல்ஹாசன் – மணிரத்னம் காம்போவில் மீண்டும் ஒரு படம் வெளியாக சாத்தியமிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

Related Posts
1 of 23

வருகிற ஜனவரி 28-ம் தேதி பெங்களூருவில் இண்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவல் நடைபெறுகிறது.

இந்த விழாவை தொடங்கி வைக்க கமல், மணிரத்னம் இருவருமே வருகிறார்கள். அங்கு வருகிற இடத்தில் தான் இருவரையும் நேரில் சந்திக்க வைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

அப்போது அவர்களிடம் புதுப்படம் தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டு புதுப்படத்துக்கான அச்சாரத்தைப் போடப் போகிறார்களாம்.

நல்ல விஷயம் தான். சீக்கிரம் செய்ங்க…