மலேசியாவில் கால்பதிக்கும் ஆஹா தமிழ் !

கோலாலம்பூர்- 23 செப்டம்பர் 2022 – மலேசியாவில் ஆஹா தமிழ் OTT தொடங்கப்படுவதற்கான அறிமுக விழா, கோலாலம்பூர் பார்க் ரோயலில் விமரிசையாக நடந்தேறியது. இந்நிகழ்வினை மலேசிய மனிதவள அமைச்சர், டத்தோ ஸ்ரீ எம். சரவணன் அவர்கள் அதிகாரப்பூர்வமாக தொடங்கிவைத்தார். இந்நிகழ்வில் இந்திய ஆஹா குழுமத்தினர், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் நம் நாட்டு மண்ணின் மைந்தர்கள் பலர் கலந்துக்கொண்டனர்.
தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளடக்கங்களில், இரண்டு ஆண்டுகள் இந்திய சந்தையில் வெற்றிநடைபோடுகின்ற ஆஹா OTT தளம், இம்முறை மலேசியாவில் பெரும் எதிர்பார்ப்போடு கால்பதிக்கின்றது.இத்தளம் தொடங்கப்பட்டதிலிருந்து தரமான படைப்புகளை திறமையான பிரபலங்களின் மூலம் தந்துக்கொண்டிருக்கின்றது. 100 % தமிழ் படைப்புக்களை வழங்கிவரும் ஆஹா தமிழ் OTT , விக்ரம், விருமன், கூகுள் குட்டப்பா,மன்மதலீலை, அகாஷிவானி, அம்மூச்சி 2 , குத்துக்கு பத்து, எமோஜி மற்றும் சர்க்கார் வித் ஜீவா போன்ற வெற்றிப்படைப்புகளை உள்ளடக்கியது.
பிரபல நடிகர் சிம்பு மற்றும் முன்னணி இசை அமைப்பாளர் அனிருத் இருவரும் மலேசியாவில் கால்பதிக்கவிருக்கும் ஆஹா தமிழ் OTT தளத்திற்கு விளம்பர தூதர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.மேலும், மலேசியாவில் நடந்தேறிய அனிருத் லைவ் யின் மலேசியா 2022 கலைநிகழ்ச்சியின் OTT சேவையை உடன் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
#aha Tamil #ஆஹாதமிழ்