ட்ரிகர்- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

சட்டை போட்டாலும் போடாவிட்டாலும் தீயோரை வேட்டையாடும் வழக்கமான போலீஸின் கதை

குழந்தை மிஸ்ஸிங் கேஸ் ஒன்றில் இருந்து விரியும் கதை படிப்படியாக கனமான பின்னணியை நோக்கி பயணிக்கிறது. போலீஸ் கதைகளுக்கே உரிய சிலபல சமரசத்தோடு பயணிக்கும் கதை எப்படியான முடிவை எட்டுகிறது என்பதை ஓரளவு சீரியஸாக சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குநர் சாம் ஆண்டன்

அதர்வா இப்படத்திற்கு சாலவும் பொருந்தியிருக்கிறார் உடலளவில். எமோஷ்னல் காட்சிகளில் இன்னும் அவருக்கு வீரியம் தேவை. பரதேசியில் பாலா செதுக்கியது போல அதர்வாவை இப்போது யாராவது செதுக்கணும். தான்யா
ரவிச்சந்திரன் அழகு போலவே நடிப்பிலும் கவனம் ஈர்க்கிறார். இருவருக்குமான காதல் போன்ற காதல் காட்சிகள் நன்றாக இருக்கின்றன. ஏனைய கேரக்டர்கள் யாரும் கொடுத்த வேலைக்கு குறை வைக்கவில்லை.

பின்னணி இசை படத்தை ஓரளவு முன்னகர்த்திச் செல்கிறது. ஒளிப்பதிவினால் படத்தின் குவாலிட்டி நன்றாக இருக்கிறது.

இப்போதெல்லாம் ரசிகனை வித்தியாசமான கதை மட்டும் ஈர்ப்பதில்லை. சாதுர்யமான கதை சொல்லல் தான் ஈர்க்கிறது. அந்தக் கதை சொல்லல் பாணியில் சின்னதாக லேக் இருந்தாலும் ரசிகன் உச் கொட்டுவான். அதனை உணரும் பொறுப்பை இப்படத்தில் சாம் ஆண்டன் பல காட்சிகளில் தட்டிக்கழித்துள்ளார். திரைக்கதை எனும் ட்ரிகரை நன்றாக அழுத்தியிருந்தால் படம் சீறிப்பாய்ந்திருக்கும்
3/5

#Trigger #ட்ரிகர்