விக்ரமுக்கும், தனுஷுக்கும் ஜோடி; என்ன பிரயோசனம்? : புலம்பும் ஐஸ்வர்யா ராஜேஷ்

Get real time updates directly on you device, subscribe now.

ஞ்சித் இயக்கிய ‘அட்ட கத்தி’யில் ஒரு முனையாக மட்டுமே வந்து போனவர் ஐஸ்வர்யா ராஜேஷ்.

படம் ஹிட்டானாலும் அடுத்தடுத்து எதிர்பார்த்த பெரிய ஹீரோக்களின் படங்கள் அமையாததால் தனக்கு மிகவும் பரிச்சயமான சின்னத்திரை பக்கமே போய் விடலாமா? என்று யோசித்த போது தான் வெற்றிமாறன் தயாரிப்பில் ‘காக்கா முட்டை’ படத்தில் நடித்தார்.

அந்தப்படம் ஐஸ்வர்யா ராஜேஷின் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனைப் படமாக அமைந்தது. இதனால் தமிழில் ஆறாது சினம், ரம்மி, தர்மதுரை, குற்றமே தண்டனை, மோ உள்ளிட்ட படங்களில் நடித்தார். இப்போது மலையாளம், ஹிந்தி என மொழிகள் கடந்தும் நடித்து வருகிறார்.

Related Posts
1 of 70

இதுபோக அவர் எதிர்பார்த்தபடியே விக்ரமுடன் ‘துருவ நட்சத்திரம்’, தனுஷுடன் ‘வட சென்னை’ என முன்னணி ஹீரோக்களின் படங்களிலும் நடித்து பிஸியாக இருக்கிறார்.அப்படியிருந்தும் மிகுந்த மன வருத்தத்தில் தான் இருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

ஏனாம்?

எதிர்பார்த்தபடி பட வாய்ப்புகள் குவிந்தாலும் எந்தப் படத்திலும் சம்பளம் மட்டும் ஒரு சதவீதம் கூட உயரவே இல்லையாம். சொல்லப்போனால் முன்பை விட குறைந்த சம்பளமே தருகிறார்களாம். இருந்தாலும் முன்னணி ஹீரோக்களின் படங்கள் என்பதால் தவற விட மனமில்லாமல் பல்லைக் கடித்துக் கொண்டு நடிக்கிறாராம்.

இதைத்தான் கூலுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை சொல்வாங்கப்பூ…!