சென்னை வந்தார் அஜித் : அதிகாலையில் ஜெயலலிதா சமாதிக்கு அஞ்சலி!

Get real time updates directly on you device, subscribe now.

 

ajith

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் ‘ஏ.கே 57’ படத்தின் படப்பிடிப்பு பல்கேரியாவில் பல நாட்களாக நடைபெற்று வருகிறது.

இதற்காக பல்கேரியா காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன், விவேக் ஓபராய் உள்ளிட்ட படக்குழுவினருடம் பல்கேரியா சென்றிருந்தார் அஜித்.

இந்த நிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5-ம் தேதி இரவு 11: 30 மணியளவில் காலமானார் என்கிற செய்தி வெளியானது. இந்த தகவல் பல்கேரியாவில் படப்பிடிப்பில் இருந்த நடிகர் அஜித்துக்கும் தெரியப்படுத்தப்பட்டது.

Related Posts
1 of 53

ஏற்கனவே அ.தி.மு.க அபிமானி என்று சொல்லப்பட்டு வருபவர் அஜித் என்பது ஒருபுறமிருக்க, ஜெயலலிதா மீது தீவிர பற்றும், பாசமும் கொண்டவர் என்பதும் எல்லோரும் அறிந்த விஷயம்.

இதனால் ஜெ மறைவுச் செய்தி கேட்டு சோகமான அஜித் எப்படியாவது அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த வேண்டும் என்று விரும்பினார்.

ஆனால் நேற்று உடனடியாக சென்னை திரும்ப முடியாத நிலை ஏற்பட்டதால், காலையில் தன் சார்பில் இரங்கல் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதோடு உடனே சென்னை திரும்பவும் தயாரானார். அதன்படி நேற்று இரவு பல்கேரியாவிலிருந்து விமானம் மூலம் சென்னை திரும்பினார் அஜித்.

இன்று அதிகாலை சென்னை வந்தவர் தன் மனைவி ஷாலினியுடன் மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் சமாதிக்கு அஞ்சலி செலுத்தினார்.

மேலும் தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், மற்றும் ஜெ., வின் தோழி சசிகலாவை  ஆகியோரை நேரில் சந்தித்து ஜெ., மறைவுக்கு ஆறுதல் கூறுகிறார் என்று சொல்லப்படுகிறது.