சிவகுமார் கிளாப் அடிக்க… சூர்யா ரோல்லிங் செய்ய… – இனிதே துவங்கியது ‘கார்த்தி-17’ படப்பிடிப்பு

‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அப்படத்தின் ஜோடியான கார்த்தியும், ரகுல் ப்ரீத் சிங்கும் மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைகிறார்கள்.
‘கார்த்தி 17’ என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்தப் புதிய படத்தை அறிமுக இயக்குநர் ரஜத் ரவிசங்கர் இயக்குகிறார்.
ரிலையன்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தோடு இணைந்து பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ். லக்ஷ்மண் குமார் தயாரிக்கிறார்.
கார்த்திக், பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே. விக்னேஷ், அம்ருதா, ரேணுகா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. இதில் சிவகுமார், சூர்யா, கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், படத்தொகுப்பாளர் ரூபன், தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் ,இயக்குநர் ரஜத் ரவிசங்கர் , 2டி எண்டர்டெயின்மெண்ட் ராஜசேகர் பாண்டியன், ஸ்டண்ட் இயக்குநர்கள் அன்பறிவ், இயக்குநர் பாண்டிராஜ் ,இயக்குநர் மாதேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
சிவகுமார் கிளாப் அடித்து படப்பிடிப்பை துவக்கி வைக்க, கார்த்தியின் அண்ணனும் நடிகருமான சூர்யா கேமராவை ரோல்லிங் செய்தார்.
இம்மாதம் 8-ம் தேதி சென்னையில் ஆரம்பமாகும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து ஐரோப்பாவில் 15 நாட்களும், ஹைதராபாத், மும்பை, இமயமலை ஆகிய இடங்களிலும் நடைபெற உள்ளது.