ஏ கே 57 : அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் டபுள் ட்ரீட்!

Get real time updates directly on you device, subscribe now.

ak-57

‘வேதாளம்’ வெற்றியைத் தொடர்ந்து அஜித்தின் 57 வது படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் நடக்கும் கொலையின் பின்னணியை விசாரிக்க பல நாடுகளுக்கு அஜீத் செல்வது போல படத்தின் கதைக்களம் அமைந்திருப்பதால் முதல்கட்ட படப்பிடிப்பு முழுவதும் ஐரோப்பிய நாடுகளில் படமாக்கப்பட்டது.

இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் அது தனது பிரைவேசிக்கு இடைஞ்சலாக இருக்கும் என்று அஜித் கேட்டுக் கொண்டதையடுத்து லொக்கேஷனை ஹைதராபாத்துக்கு மாற்றி விட்டார் இயக்குநர் சிவா.

Related Posts
1 of 54

இதில் இன்டர்போல் ஏஜெண்டாக நடிக்கும் அஜீத்துக்கு மனைவியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். கமல்ஹாசனின் இளைய மகள் அக்‌ஷரா அஜீத்தின் உதவியாளராக நடிக்கிறார். இது தவிர படத்தில் அஜித் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரக்கூடிய செய்தி ஒன்றும் இப்போது கசிந்திருக்கிறது.

ஆமாம் படத்தில் இரட்டை வேடங்களில் வருகிறாராம் அஜித். ஒரு அஜித் இன்டர்போல் ஏஜெண்டாக இருந்தால் இன்னொரு அஜித் வில்லனா என்கிற கேள்வி எழுகிறதல்லவா?

இந்த சந்தேகத்துக்கு போகப்போக சரியான பதில் கிடைத்து விடும். அதுவரை வெயிட் அண்ட் ஸீ…