10 வருடங்களுக்கு இப்படம் குறித்து அனைவரும் பேச வேண்டும் – ஸ்டன் சிவா!

Get real time updates directly on you device, subscribe now.

‘அகண்டா’ என்ற தெலுங்கு படம். நடிகர் பாலகிருஷ்ணா நாயகனாக நடித்திருக்கிறார். அவருடன் இது எனக்கு மூன்றாவது படம். முதல் படம் ‘லட்சுமி நரசிம்மன்’. இரண்டாவது படம் ‘சிம்ஹா’. மூன்றாவது படம் ‘அகண்டா’. மூன்று படங்களுமே வெற்றி படங்கள் தான். அதிலும் சமீபத்தில் ‘அகண்டா’ மாபெரும் வெற்றிப் பெற்றுள்ளது. இப்படத்தின் இயக்குநர் போயபதி ஶ்ரீனு தான் எனக்கு இந்த வாய்ப்புக் கொடுத்தார். இப்படத்தில் ஆக்க்ஷன் மிகப்பெரிய அளவில் இருக்கும். ஆக்‌ஷன் காட்சி மட்டுமே 85நாள்கள் படமாக்கப்பட்டது. இதற்கு எனக்கு மிகப்பெரிய பலமாக இருந்தது எனது இரு மகன்கள் கெவின் குமார் மற்றும் ஸ்டீவன் குமார் தான். ஆக்க்ஷனுக்காகவே இப்படம் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது. நல்ல பெயர் கிடைத்திருக்கிறது.