மனதின் போராட்டத்தை சொல்லும் “வஞ்சம் தீர்” பாடல்!

Get real time updates directly on you device, subscribe now.

மனத்தில் ஒளிந்திருக்கும் கோபம், ஏமாற்றம் மற்றும்பழிவாங்கும் உணர்வுகளின் பிரதிபலிப்பாக உருவாகியுள்ள “வஞ்சம் தீர்” ஆல்பம் பாடல் தற்போது யூடியூபில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
 
“ஒவ்வொருவரின் மனதிற்குள்ளிருக்கும் சாத்தான் வேதம் சொன்னால் என்னவாக இருக்குமென்ற?” சிந்தனையை மையக் கருவாக  உருவாகியுள்ள இந்த பாடல், கோபத்தையும்,வஞ்சத்தையும் நேர்மறை சக்தியாக மாற்றி வெற்றியை நோக்கி பயணிக்க வேண்டும் என்ற உன்னத கருத்தை பொட்டில் அடித்தாற் போல் பேசுகிறது. “வாழ்ந்து காட்டி வஞ்சம் தீர்” என்ற மையக் கருத்து, பாடலின் ஒவ்வொரு காட்சியிலும், வரிகளிலும் வலிமையாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

புஷ்பநாதன் ஆறுமுகம் எழுதி, இயக்கியுள்ள இந்த பாடல், வாழ்க்கையில் சந்திக்கும் அவமானங்களும், வலிகளும், நிராகரிப்புகளும் நம்மை பழிவாங்க இயக்குபவையல்ல. மாறாக, வெற்றி பெற்று வாழ்ந்து காட்டுவதுதான் உண்மையான பதில் என்ற வலுவான கருத்தை எடுத்துரைக்கிறது.

முன்னணி இயக்குநர் நிதிலன் சுவாமிநாதனிடம், மகாராஜா திரைப்படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய புஷ்பநாதன் ஆறுமுகம், தனது தனிப்படைப்பாக இந்த பாடலை எழுதி, தயாரித்து, இயக்கியுள்ளார். தனது வாழ்க்கையில் சந்தித்த அனுபவங்கள், போராட்டங்களிலிருந்து பெற்ற புரிதல்களை அடிப்படையாகக் கொண்டு இந்த படைப்பை உருவாக்கியுள்ளார்.