அலங்கு- விமர்சனம்

அலங்கு! மனிதம் பேச விழையும் மற்றொரு சினிமா
ஹீரோ குணாநிதி மரணத்தின் வாசல்வரை சென்று மீண்ட நாய் ஒன்றை எடுத்து வளர்க்கிறார். நாயின்றி அவரில்லை என்ற ரேஞ்சில் அவர்களின் பிணைப்பு இருக்கிறது. இச்சூழலில் ஊர்த்தலைவர் செம்பன் வினோத் மூலமாக நாய்க்கு ஒரு ஆபத்து வருகிறது. அந்த ஆபத்திலிருந்து குணாநிதி நாயை எப்படி காப்பாற்றுகிறார்? என்பதே கதை
குணாநிதி கதையின் நாயகனாக படத்தில் கவனம் ஈர்க்கிறார். நிறைய இடங்களில் எமோஷ்னல் காட்சிகளை நல்ல நடிப்பால் தாங்குகிறார். செம்பன் வினோத், சரத் அப்பானி உள்பட மற்ற கேரக்டர்களும் நன்றாக நடித்துள்ளனர்
படத்தின் பின்னணி இசையில் போதுமான அதிர்வை ஏற்படுத்தியுள்ளார் இசை அமைப்பாளர். பாடல்கள் பரவாயில்லை ரகம். ஒளிப்பதிவு சிறிய படத்திற்கு ஏற்ற வகையில் கச்சிதமாக அமைந்துள்ளது
திரைக்கதையில் ஓரளவு எமோஷ்னல் கூடி வந்துள்ளது. இது அலங்குவின் முதல் வெற்றி. இன்னும் படம் பெரிதாக கவனம் பெறும் வகையில் இயக்குநர் எழுத்திலும், ஆக்கத்திலும் உழைத்திருக்கலாம். ‘வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடிய’ கலாச்சாரம் நமது கலாச்சாரம் என்பதால், நம்மோடு வாழும் அஃன்றினை உயிர்களையும் நேசிக்க வேண்டும் என்கிறது இந்த அலங்கு. அதனால் அலங்குவிற்கு குறைகளை மறந்து பாராட்டுக்களை தெரிவிக்கலாம்
2.75/5