திரு.மாணிக்கம்- விமர்சனம்
ஒரு நேர்மையாளனின் கதை
வறுமை சூழ்ந்த நிலையிலும் நேர்மையாக வாழ்ந்து வருபவர் சமுத்திரக்கனி. மனைவி இரு மகள்களோடு வாழும் அவரின் தொழில், குமுளியில் லாட்டரிச் சீட்டு விற்பது தான். அவரிடம், ‘பணம் நாளைக்குத் தருகிறேன்’ என்று சொல்லி லாட்டரிச் சீட்டை வாங்குகிறார் பாரதிராஜா. வாங்கியவர் அவரிடமே கொடுத்தும் வைக்கிறார். அந்த லாட்டரிக்கு ஒன்றரை கோடி பரிசு விழுகிறது. இப்போது அந்த லாட்டரிச்சீட்டு யாருக்குச் சொந்தமாகிறது? சுயநலங்களைத் தாண்டி அறம் எப்படி ஜெயிக்கிறது? என்பதாக படத்தின் கதை விரிகிறது
கதையின் நாயகனாக சமுத்திரக்கனி மின்னுகிறார். எதார்த்த நடிப்பிற்கு என்று பெயர் பெற்ற அவர், பாரதிராஜாவோடு ஸ்கிரீன் ஷேர் செய்யும் காட்சி ஒன்றில் கலங்க வைக்கிறார். நாயகி அனன்யா உள்பட மற்ற கேரக்டர்கள் எல்லாம் சம்பிராயத்திற்காக உருவாக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நடிப்பிலும் அது தெரிகிறது. பாரதிராஜா ஒருசில இடங்களில் மிகையின்றியும்,பல இடங்களில் மிகையாகவு நடித்துள்ளார்
பாடல்கள் பெரிதாக கவனம் பெறவில்லை. பின்னணி இசை பராவாயில்லை. ஒளிப்பதிவாளர் குமுளி அழகை அள்ளித் தருகிறார்
ஏற்கெனவே வெளியான பம்பர் படத்தின் கதை, திரைக்கதையின் இன்னொரு வடிவமாகத் தான் இப்படம் தயாராகியுள்ளது. அந்தப் படத்தில் இருந்த எதார்த்தம் இப்படத்தில் மிஸ் ஆகியுள்ளது. நிறைய செயற்கை உணர்ச்சிகள் படமெங்கும் செரிக்க முடியாததாக இருக்கிறது. முதல்பாதி பெரிய சோதனை. இரண்டாம் பாதி ஓரளவு கமர்சியல் மீட்டரில் சென்று, முடிவும் சிறப்பாக அமைந்துள்ளது.
2.75/5