நிச்சயம் அல்லி படத்தை மக்கள் கொண்டாடுவார்கள்- கார்த்திக் சுப்புராஜ்

Get real time updates directly on you device, subscribe now.


இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் சார்பாக அடுத்து வெளியாக இருக்கும் டப்பிங் படம் அல்லி. மலையாளத்தில் கவனிக்கக்கூடிய படங்களைத் தந்த சணல்குமார் சசிதரன் இப்படத்தை எழுதி இயக்கி இருக்கிறார். இப்படம் மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் தற்போது தமிழில் வெளியாக இருக்கிறது. நேற்று இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
விழாவில் பேசிய கார்த்திக் சுப்புராஜ்,

” ஒரு பையனும் பெண்ணும் முதல்முறையாக சிட்டிக்கு ஒரு ட்ரீப் வருகிறார்கள். அவர்களோடு அந்தப்பையனுக்குப் பிடிக்காத ஒருவரும் வருகிறார். இவர்கள் மூவருக்குள்ளும் நடக்கும் விசயங்கள் தான் அல்லி படம். நிச்சயமாக இந்தப்படத்தை மீடியாவும் ரசிகர்களும் கொண்டாடுவார்கள் என்று நம்புகிறேன் .” என்றார்