மெரினா புரட்சி- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

RATING : 3.5/5

படமல்ல பாடம் என்று சொல்லி நிறைய படங்கள் நம்மை படுத்தி எடுத்து விடும். ஆனால் மெரினா புரட்சி தான் இதைத்தான் சொல்லப்போகிறேன் என்ற தெளிவோடு வந்திருக்கிறது.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் பின்னணி தெரியாதவர்களுக்கு மிகச்சரியான விளக்கம் கொடுக்கிறது படம். இதை ஒரு கமர்சியல் படம் என்றோ கலைப் படைப்பு என்றோ நம்பிப் போனால் ஏமாற்றம் தான் மிஞ்சும். இது நம் கண்முன் நடந்த வரலாற்றை ஆவணப்படுத்தி உள்ளது. மனிதனுக்கு மறக்கும் தன்மை அதிகம். அதனால் இப்படியான விசயங்களை நினைவுப்படுத்த வேண்டியது முக்கியமானதாக இருக்கிறது. அதைச் செவ்வனே செய்திருக்கிறார் இயக்குநர் எம்.எஸ் ராஜ்.

ஒரு நேர்காணல் மூலமாக தொடங்கும் படம் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் வரலாறுகளை நன் கண்முன் காட்சிகளாக வைக்கிறது. இதில் நாம் போராடியதும் கோசம் போட்டதும் தான் நிறைய மக்களுக்குத் தெரியும். ஆனால் அதற்குப் பின்னால் நடந்த அரசியல் விசயங்களை ஆழமாக எடுத்துரைக்கிறது மெரினா புரட்சி.

கொண்டாட்ட சினிமா ரசிகர்களுக்கு இந்த ஆவணம் சற்று சலிப்பைத் தரலாம். இப்படத்தை ஒரு பக்கா எண்டெர்டெயின்மெண்ட் விசயங்களைச் சேர்த்து கூட இயக்குநர் சொல்லி இருக்கலாம். ஒருவேளை இதில் கமர்சியல் கலந்தால் இதன் சீரியஸ்னெஸ் குறைந்து விடும் என்று இயக்குநர் கருதி விட்டாரோ என்னவோ?

மெரினா புரட்சியில் பங்கெடுத்த அனைவரும் இப்படத்தைப் பார்த்தாலே இப்படம் எடுக்கப்பட்ட நோக்கம் நிறைவேறிவிடும். முயற்சித்துப் பாருங்கள்.